Monday, January 7, 2013

க்ரோசண்ட்/ Croissant

Recipe Source: Julia Child

கொடுத்துள்ள அளவில் நான் பாதி அளவில்  சேர்த்து செய்துள்ளேன்.இந்த அளவில் 6 க்ரோசண்ட் வரும்.

தே.பொருட்கள்

ஈஸ்ட் கலவை

டிரை ஈஸ்ட் -1/2 டீஸ்பூன்
உப்பு - 1/8 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 டேபிள்ஸ்பூன்
வெதுப்வெதுப்பான நீர் - 1/8 கப் (100°F/38°C)

வெதுப்பான நீரில் மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

க்ரோசண்ட் கலவைக்கு

மைதா மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
பால் - 1/3 கப்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் -1/4 கப் (= 60 கிராம் /Half Stick = 1/8 lb)
முட்டை - 1 / பால் -மேலே தடவ

செய்முறை

*பாலில் உப்பு+சர்க்கரை+எண்ணெய்+பொங்கிய ஈஸ்ட் கலவை இவறை ஒன்றாக கலந்து மாவில் சேர்த்து பிசையவும்.

*இந்த அளவே மாவு பிசைவதற்கு சரியாக இருக்கும்.தேவையானால் மட்டும் நீர் சேர்த்து பிசையவும்.

*மிருதுவாக 10 நிமிடங்கள் பிசையவும்.
*ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.

*2 மணிநேரம் கழித்து இருமடங்காக உப்பியிருக்கும் மாவை பிசைந்து மீண்டும் வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைத்து எடுக்கவும்.
*வெண்ணெயை அறைவெப்பநிலையில் வைத்து நன்றாக பிசையவும்.
*உப்பியிருக்கும் மாவை Rectangle வடிவில்  உருட்டில் மேல்பாகத்தில் வெண்ணெயை வைக்கவும்.

*வெண்ணெய் தடவாத பகுதியை உள்பக்கமாகவும்,தடவிய பக்கத்தை மேல்பக்கமாகவும் மடிக்கவும்.
*இவற்றை க்ளியர் ராப் கவரில் மடித்து ப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைக்கவும்.
*ப்ரிட்ஜிலிருந்து எடுத்து வடிவில் வெண்ணெய் கலவை வெளியவராதபடி உருட்டி இப்பொழுது மடிப்பு பக்கத்தை மாற்றி முன்பு கூரியதை போலவே அல்லது படத்தில் காட்டியள்ளதுபோல் மடிக்கவும்.

*இது போல் 3 அல்லது 4 முறை செய்யவும்.ஒவ்வொரு மடிப்புக்கு பிறகும் க்ளியர் ராப் கவரில் சுற்றி 1/2 மணிநேரத்துக்கொருமுறை செய்யவும்.

*மீண்டும் Rectangle வடிவில் உருட்டி 3 பாகமாக வெட்டி ஒரு பாகத்தை உபயோகபடுத்தவும்,மற்ற இரண்டியும் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*வெட்டிய பக்கத்தை ஒன்றை Square வடிவில் உருட்டி Diagonale ஆக வெட்டவும்.
*வெட்டியதில் ஒன்றை எடுத்து அடியிலிருது உருட்டினால் படத்தில் உள்ளது போல் வரும்.

*இதுபோல் அனைத்தையும் செய்து பேக்கிங் டிரேயில் இடைவெளி வைத்து அடுக்கி 2மடங்காக உப்பும்வரை வைக்கவும்.

*உப்பியதும் பால்/முட்டையில் சிறிது நீர் கலந்து ப்ரெஷ்ஷால் க்ரோசண்ட் மேல் தடவவும்.
*240 °C முற்சூடு செய்த அவனில் 10-12 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

பி.கு

*இதனை செய்ய எனக்கு 2 நாளானது.

*முதல்நாள் வெண்ணெய் கலவையை மாவில் வைத்து மடித்ததும் ஒர் இரவு முழுவதும் ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் மீதியுள்ள ஸ்டெப்படி செய்தேன்.

* எத்தனை முறை மடிக்கிறமோ அத்தனை லேயர்கள் வரும்.நான் 5-6 தடவை மடித்து செய்தேன்.அதனால் அதிக அளவில் லேயருடன் மிருதுவாக இருந்தது.

0 comments:

Post a Comment