Thursday, September 29, 2011

வெங்காய பச்சடி செய்ய தே.பொருட்கள்
வெங்காயம் - 1
தயிர் - 1 கப்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

செய்முறை

*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.


*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து வெங்காயம் போட்டு லேசாக வதக்கி ஆறவைக்கவும்.
*ஆறியதும் உப்பு+தயிர் சேர்த்து கலக்கி சப்பாத்தியுடன் பரிமாறவும்.

களகோஸ் க்ரேவி செய்ய தே.பொருட்கள்

களகோஸ் - 5
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*களகோஸை நான்காக வெட்டி மூழ்குமளவு நீர் விட்டு உப்பு சேர்த்து 3/4 பதமாக வேகவைக்கவும்.களகோஸ் சீக்கிரம் வெந்துவிடும்..
*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் தேங்காய் விழுது+களகோஸ் மற்றும் வேகவைத்த நீருடன் சேர்க்கவும்.

*நன்கு கொதித்ததும் இறக்கவும் .

Wednesday, September 28, 2011

Endives Salad

0
 ப்ரெஞ்ச் சானலில் பார்த்து செய்தது..

தே.பொருட்கள்
Endives - 3
ரெட் ஆப்பிள் - 1
Parmesan Cheese-1/4 கப் துருவியது
ஆரஞ்சு ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*Endives  பொடியாக நறுக்கவும்.ஆப்பிளை தோல் சீவி நடுத்தர துண்டுகளாக நறுக்கவும்.
                                      
*ஒரு பவுலில் நறுக்கிய Endives +ஆப்பிள்+ துருவிய சீஸ் இவற்றை ஒன்றாக கலக்கவும்.

*ஆரஞ்சு ஜூஸ்+உப்பு+மிளகுத்தூள்+ஆலிவ் எண்ணெயை ஒன்றாக கலந்து சாலட்டில் ஊற்றி நன்கு கலந்து பரிமாறவும்.

Monday, September 26, 2011

 வேப்பமரத்தின் மருத்துவகுணங்கள் பற்றி அனைவரும் அறிந்ததே!!
குடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு.

இதனை வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது நல்லது.

தே.பொருட்கள்
புளிகரைசல் - 2 கப்
தக்காளி - 1 பெரியது
ரசப்பொடி - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்(விரும்பினால்)
மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள் - தலா1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
நெய்(அ)எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கா.மிளகாய் - 1
வேப்பம்பூ - 2 டீஸ்பூன்

செய்முறை

*புளிகரைசலில் தக்காளியை கரைத்து அதனுடன் மஞ்சள்தூள்+பெருங்காயத்தூள்+உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
 *பச்சை வாசனை அடங்கியதும் ரசப்பொடி சேர்த்து கொதிக்கவிட்டு நுரைவரும் போது இறக்கவும்.
 *கடாயில் நெய் விட்டு கடுகு+காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வேப்பம்பூவை சேர்த்து கருகாமல் வறுத்து ரசத்தில் சேர்க்கவும்.
பி.கு
*வேப்பம்பூ கருக விட்டால் ரசம் கசக்கும்.

*கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்தால் ரசத்தின் சுவை மாறுபடும்.

*வேப்பம்பூ நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும்.

Sunday, September 25, 2011

களகோஸ்,இது கேபேஜ் வகையை சார்ந்தது.இதில் அதிகளவு விட்டமின் K&C  இருக்கிறது.மற்றும் விட்டமின் A,B6,B1,B2, ப்ரோட்டின்,Omega3 Fattyacids,கால்சியம்,இரும்புச்சத்தும் இருக்கு.அதிகளவு நார்ச்சத்தும் இருக்கு..கர்ப்பிணிகள் சேர்த்துக் கொள்ளவேண்டிய காய்களில் இதுவும் ஒன்று...

குறைந்தளவு கலோரிஸ் இருப்பதால் உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவுகிறது.100 கிராமில் 40 கிராம் கலோரிஸ் தான் இருக்கு..

நல்ல பச்சைநிறமுள்ள காயாக பார்த்து வாங்கவேண்டும்.வெதுவெதுப்பான உப்புக் கலந்த நீரில் கழுவி வெட்டவேண்டும்.

குறைந்தளவு நீர் ஊற்றி சமைத்தால் போதுமானது,இது சீக்கிரம் வெந்துவிடும்.

ஆவியில் வேகவைத்து சாலட் போல செய்து சாப்பிட நன்றாகயிருக்கும்...


தே.பொருட்கள்
களகோஸ் - 12
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
தேங்காய்த்துறுவல்  - 1/2 கப்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*களகோஸை பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*பின் நறுக்கிய களகோஸ்+பாசிப்பருப்பு+உப்பு+தேவையானளவு நீர் விட்டு வேகவைக்கவும்.

*வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

Wednesday, September 21, 2011


திண்டுக்கல் என்றாலே பூட்டு ஞாபகம் வருவது போல பிரியாணியும் புகழ் பெற்றது.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சிறிது தூரத்தில் வேணு பிரியாணி ஹோட்டல் இருக்கு.திண்டுக்கல் போனால் யாரும் மிஸ்பண்ணிடாதீங்க அந்த ஹோட்டலில் பிரியானி சாப்பிட....சிறிய ஹோட்டல்தான் என்றாலும் அங்கு பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும்.

விதவிதமா பிரியாணி சமைப்பது ரொம்ப பிடிக்கும்.ஒருமுறை டி.வியில் பார்த்து செய்த குறிப்பு இது...

இந்த பிரியாணி செய்ய சில டிப்ஸ்

*பிரியாணி செய்ய நல்ல தண்ணீர் அவசியம்.உப்புத்தண்ணீர் சுவையை மாற்றி விடும்.

*தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

*சீரக சம்பா அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும். 1 கப் = 2 கப் நீர் சேர்க்கவேண்டும்.பாஸ்மதிக்கு 1 கப் = 1 1/2 கப் நீர் சேர்க்கவேண்டும்.

*மட்டன் இளங்கறியாக இருந்தால் சுவை சூப்பர்.

*பூண்டைவிட இஞ்சி அதிகளவில் சேர்க்கவேண்டும்.

நான் பாஸ்மதி அரிசியைதான் உபயோகித்துள்ளேன்.

தே.பொருட்கள்
மட்டன்  1/2 கிலோ
அரிசி - 4 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 2 பெரியது
தேங்காய்ப்பால் - 3 கப்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டுப்பல் - 6
நெய் - 100 கிராம்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 125 கிராம்
பச்சை மிளகாய் - 10
புதினா கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க
கசகசா - 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 5
பட்டை - சிறுதுண்டு
பிரியானி இலை -3
கிராம்பு - 5

செய்முறை

*எண்ணெயில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.

*கறியை சிறிது உப்பு+மஞ்சள்தூள்+தயிர் சேர்த்து பிரட்டி குக்கரில் 3 விசில் வரை வேகவைத்து தண்ணிரை அளந்து வைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி அரியவும்.பச்சை மிளகாயை கிறவும்.இஞ்சி பூண்டை அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு+தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் பொடித்த பொடி சேர்த்து கிளறவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.இல்லையெனில் அடி பிடிக்கும்.

*பின் கறிவேக வைத்த நீரை அளந்து அதற்க்கு தேவையானளவு நீர் 2ம் 3 கப் வருமாறு அளந்து ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிவந்ததும் அரிசி+உப்பு சேர்க்கவும்.தண்ணீர் சுண்டி வரும் போது தேங்காய்ப்பால்+வேகவைத்த கறி சேர்க்கவும்.

*நீர் சுண்டி வரும் போது புதினா கொத்தமல்லி+நெய் சேர்த்து தம்மில் 15 நிமிடம்  போடவும். அல்லது 190°C முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.


*சுவையான பிரியாணி ரெடி!!

Tuesday, September 20, 2011

இன்று 3 வது பிறந்தநாள்  காணும் என் செல்லக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
Birthday Graphics

Sunday, September 18, 2011


தே.பொருட்கள்:
பொடியாக நறுக்கிய புடலங்காய் - 1 கப்
உப்பு சேர்த்து வேகவைத்த காராமணி - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்த பருப்பு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து புடலங்காய் + உப்பு சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து வேகவிடவும்.

*புடலங்காய் பாதியளவு வெந்ததும் காராமணி சேர்த்து வேகவிடவும்.

*பின் புடலங்காய் வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

Friday, September 16, 2011


தே.பொருட்கள்
துருவிய பீட்ருட் - 1 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு

செய்முறை

*கடாயில் சிறிது நெய் விட்டு பீட்ரூட்டை பச்சை வாசனை போக வதக்கவும்.

*பின் பால் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் சர்க்கரை+ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

*சுண்டி வரும் போது நெய்+முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.