Sunday, September 25, 2011

களகோஸ் பொரியல்/Brussels Sprouts Poriyal

களகோஸ்,இது கேபேஜ் வகையை சார்ந்தது.இதில் அதிகளவு விட்டமின் K&C  இருக்கிறது.மற்றும் விட்டமின் A,B6,B1,B2, ப்ரோட்டின்,Omega3 Fattyacids,கால்சியம்,இரும்புச்சத்தும் இருக்கு.அதிகளவு நார்ச்சத்தும் இருக்கு..கர்ப்பிணிகள் சேர்த்துக் கொள்ளவேண்டிய காய்களில் இதுவும் ஒன்று...

குறைந்தளவு கலோரிஸ் இருப்பதால் உடல் எடையினை குறைக்க பெரிதும் உதவுகிறது.100 கிராமில் 40 கிராம் கலோரிஸ் தான் இருக்கு..

நல்ல பச்சைநிறமுள்ள காயாக பார்த்து வாங்கவேண்டும்.வெதுவெதுப்பான உப்புக் கலந்த நீரில் கழுவி வெட்டவேண்டும்.

குறைந்தளவு நீர் ஊற்றி சமைத்தால் போதுமானது,இது சீக்கிரம் வெந்துவிடும்.

ஆவியில் வேகவைத்து சாலட் போல செய்து சாப்பிட நன்றாகயிருக்கும்...


தே.பொருட்கள்
களகோஸ் - 12
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
தேங்காய்த்துறுவல்  - 1/2 கப்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*களகோஸை பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*பின் நறுக்கிய களகோஸ்+பாசிப்பருப்பு+உப்பு+தேவையானளவு நீர் விட்டு வேகவைக்கவும்.

*வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

0 comments:

Post a Comment