Monday, February 24, 2014

Recipe Source :Umaskitchenexperiments

தே.பொருட்கள்

புழுங்கலரிசி - 1 கப்
உடைத்த கறுப்பு உளுந்து - 1/2 கப்
நீர் - 3 கப்
பூண்டுப்பல் - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*அரிசி+உளுந்து இவ்விரண்டையும் கழுவி 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*குக்கரில் ஊறவைத்த  அரிசி +உளுந்து மற்றும் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து 3 விசில்வரை வேகவைத்து எடுக்கவும்.

*இதற்கு காரகுழம்பு அல்லது வத்தக்குழம்பு பெஸ்ட் காம்பினேஷன்.

Thursday, February 20, 2014

Recipe Source : Chettinadrecipes

தே.பொருட்கள்

கம்பு - 4.5 டேபிள்ஸ்பூன்
கேழ்வரகு - 4.5 டேபிள்ஸ்பூன்
சோளம் - 3 டேபிள்ஸ்பூன்
புழுங்கலரிசி - 1.5 டேபிள்ஸ்பூன்
பார்லி + ஜவ்வரிசி +வேர்க்கடலை - தலா 1.5 டேபிள்ஸ்பூன்
பச்சைபயிறு+கோதுமை+கொள்ளு - தலா 1.5 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1.5 டேபிள்ஸ்பூன்
பாதாம்+முந்திரி+ஏலக்காய் - தலா 4

செய்முறை

*அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
*2 டீஸ்பூன் சத்துமாவை பாலில் கலந்து கொதிக்கவைத்து சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.

பி.கு
*இதில் கேழ்வரகுக்கு பதில் நான் கேழ்வரகு மாவை லேசாக வறுத்து இந்த மாவில் கலந்துக் கொண்டேன்.

*மேலும் இதில் சோயா பீன்ஸ் மற்றும் Jowar சேர்க்கலாம்.

*புழுங்கலரிசிக்கு பதில் கைக்குத்தல் அரிசி சேர்க்கலாம்.

*இந்த அளவில் 2.5 கப் மாவு வரும்.
தே.பொருட்கள்:
கொள்ளு - 1 கப்
பொடித்த ஒட்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - வாசனைக்கு

வறுத்து பொடிக்க:
தனியா - 1 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
ஒமம் - 1/4 டீஸ்பூன்
 
செய்முறை :

*கொள்ளினை 4 அல்லது 5 மணிநேரம் ஊறவைத்து நீரினை வடிக்கட்டவும்.பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொள்ளு+உப்பு சேர்த்து சிறிது நீர் தெளித்து மூடி வேகவைக்கவும்.

*நடுநடுவே கிளறி கொள்ளு வெந்ததும் பொடித்த பொடி+ஒட்ஸை தூவி இறக்கவும்.

Monday, February 17, 2014

தே.பொருட்கள்:

தோல் பச்சைபயிறு - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:

* பச்சைபயிறை 3 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் உப்பு+ஒட்ஸ்+காய்ந்த மிளகாய்+சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*பின் தவாவில் எண்ணெய் விட்டு மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.

*இதற்க்கு இஞ்சி தொக்கு பெஸ்ட் காம்பினேஷன்!!

Thursday, February 13, 2014


தே.பொருட்கள்

ஸ்டீட் கார்ன் - 1/4 கப்
ப்ரோக்கலி பூக்கள் - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1/2
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் - 2
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு

செய்முறை
*குக்கரில் வெண்ணெய் விட்டு மிளகுத்தூள்+வெஜ் ஸ்டாக் தவிர அனைத்தையும் நன்றாக வதக்கவும்.

*பின் வெஜ் ஸ்டாக் சேர்த்து 3விசில் வரை வேகவைத்து,ஆறியதும் அரைக்கவும்.

*உப்பு+மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

Tuesday, February 11, 2014

தே.பொருட்கள்

ஆரஞ்ச் ஜூஸ் -1/4 கப்
லெமன் ஜூஸ்,லைம் ஜூஸ் -தலா 1/4 கப்
சர்க்கரை -3/4 கப்
துருவிய ஆரஞ்ச்,லெமன் தோல் - தலா 1/4 டீஸ்பூன்

செய்முறை
*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+1/4 கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரைந்து வரும்வரை அடுப்பில் வைக்கவும்.

*கொஞ்சம் திக்கானதும் அடுப்பிலிருந்து இறக்கி துருவிய தோல்களை சேர்க்கவும்.

*சூடு ஆறியதும் எல்லா ஜூஸ்களையும் சர்க்கரையில் கலந்து வடிகட்டி ப்ரிட்ஜில் வைத்திருந்து தேவைக்கு நீர் சேர்த்து பருகவும்.
தே.பொருட்கள்

சிகப்பு ஆப்பிள் -1

செய்முறை

*ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாகி ஆவியில் 10-15 நிமிடங்கள் வேகவைக்கவும்

*ஆறியதும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.

பி.கு

*6 மாத குழந்தைகளுக்கு டெசர்ட்டாக கொடுக்கலாம்.

*முட்டையில்லாத கேக் செய்யும் போது 1 முட்டை =1/4 ஆப்பிள் விழுது பயன்படுத்தலாம்.

*1 ஆப்பிளிலில் 1/2 கப் விழுது கிடைக்கும்.

Thursday, February 6, 2014

தே.பொருட்கள்

புளி கரைசல் - 1 1/2 கப்
தக்காளி - 2
ரசப்பொடி -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய்+நெய் = தலா 1 1/2 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு,பெருங்காயத்தூள் -தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகய் -2
நசுக்கிய பூண்டுப்பல் - 8

செய்முறை

*தக்காளியை அங்கங்கே பல்குத்தும் குச்சியால் குத்தி மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு 3 நிமிடங்கள் வைக்கவும்.

*தக்காளி ஆறியதும் தோலுரித்து அரைக்கவும்.அதனுடன் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய்+நெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து ஹையில் 4 நிமிடங்கள் வரை வைத்தெடுக்கவும்.

*வேறொரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் நெய்+எண்ணெய் ஊற்றி கடுகு+கா.மிளகாய்+பெருங்காயம் போட்டு 2 நிமிடங்கள் வைக்கவும்.பின் நசுக்கிய பூண்டை சேர்த்து மேலும் 1 நிமிடங்கள் வைத்து ரசத்தில் சேர்க்கவும்.

Tuesday, February 4, 2014

 தே.பொருட்கள்

பாசிபருப்பு - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் -1/2 கப்
ஏலக்காய் -2
நெய்யில் வறுத்த முந்திரி -தேவைக்கு

செய்முறை

*கடாயில் பாசிபருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
 *சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து நைசாக பொடிக்கவும்.
*மேற்கூறிய பொருட்களில் நெய்யை தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*நெய்யை சூடாக்கி கைபொறுக்கும் சூட்டில் லட்டுகளாக பிடிக்கவும்.
தே.பொருட்கள்

துருவிய கேரட் - 1 கப்
பாசிபருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு

தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு +பெருங்காயத்தூள்- தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1

செய்முறை

*பாசிபருப்பை 15 நிமிடம் ஊறவைத்து நீரை வடிகட்டவும்.

*அதனுடன் மேற்கூறிய பொருட்கள்+தாளித்து சேர்க்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.