Thursday, November 29, 2012

தே.பொருட்கள்

அவல்  - 2 கப்
வெல்லம் - 1/2 கப்
எள் - 1 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*அவலை வெறும் கடாயில் நிறம் மாறாமல் பொரியும் வரை வறுக்கவும்.

*எள்+தேங்காய்ப்பல்+பாசிப்பருப்பு இவற்றையும் தனித்தனியாக வெறும் கடாயில் வாசனைவறும் வரை வறுக்கவும்.


*ஒரு பவுலில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*பாத்திரத்தில் வெல்லம் போட்டு முழ்கும் வரை நீர் விட்டு  கரையவிடவும்.

*வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மறுபடியும் கொதிக்கவிடவும்.ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

*வெல்லபாகினை தண்ணீரில் விட்டால் உருண்டை கையில் எடுக்கும் பதம் வந்ததும் இறக்கி கலந்து வைத்துள்ள அவல்பொரியில்  ஊற்றி நன்கு கலக்கிவிடவும்.

பி.கு

*இது உதிரியாகதான் இருக்கும்,உருண்டை பிடிக்கமுடியாது.

*நான் சாதாரண அவலில் செய்துள்ளேன்.

*நெற்பொரி/ அவல் பொரி இவை கார்த்திகைதீபத்தன்று மட்டும்தான் கடைகளில் கிடைக்கும்.

Sunday, November 25, 2012

பொன்னாங்கண்ணி கீரையை புளி போட்டு கடைந்தால்
அண்ணாமலையாருக்கு (சிவன்) அடிநாக்கும் தித்திக்கும் என அம்மாவிடம் எங்க வீட்டு கீரைக்காரம்மா சொல்வாங்க.கார்த்திகை தீபத்தன்று  இக்கீரையை புளிபோட்டு கடைந்து படையல் செய்வது மிக நல்லது.

தே.பொருட்கள்

பொன்னாங்கண்ணி கீரை - 1 கப்
பூண்டுப்பல் - 3
நறுக்கிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் -2
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு -தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் -1/2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்

செய்முறை

*மேற்கூறிய பொருட்களை ஒன்றாக போட்டு 1/2 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*கீரை வெந்ததும் ,ஆறவைத்து நீரைவடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும்.

*கெட்டியாக இருந்தால் கீரை வேகவைத்த நீர் சேர்த்து ,தாளித்து சேர்க்கவும்.

Wednesday, November 21, 2012

தே.பொருட்கள்

காலிபிளவர் பூக்கள் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
நசுக்கிய பூண்டுப்பல் -4
கடுகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1கொத்து
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+சீரகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு+வெங்காயம்+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*பின் காலிபிளவர் பூக்கள்+உப்பு சேர்த்து மூடி போட்டு 10-15நிமிடங்கள் வேகவிடவும்.இடையிடையே கிளறி விடவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.

*காய் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

Monday, November 19, 2012


தே.பொருட்கள்

தோல் சீவி துண்டுகளாகிய இஞ்சி - 1 கப்
கெட்டி புளிகரைசல் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் - சிறிதளவு
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய்+வெந்தயம்+இஞ்சி சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த இஞ்சியை போட்டு நன்கு வதக்கி புளிகரைசலை சேர்க்கவும்.

*எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது வெல்லம் சேர்த்து இறக்கவும்.

*தயிர் சாதம்,பெசரெட் நல்ல காம்பினேஷன்.

Friday, November 16, 2012

இந்த முறையில் கோவைக்காய் பொரியல் செய்தால் கோவைக்காய் பிடிக்காதவங்களும் சாப்பிடுவாங்க.

தே.பொருட்கள்

கோவைக்காய் - 25
நீளமாக நறுக்கிய வெங்காயம் -1
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*கோவைக்காயை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*பின் மிளகாய்த்தூள்+உப்பு+கோவைக்காயை சேர்த்து  வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.அதிக தீயில் வைத்து இடையிடையே கிளறிவிடவும். 

*கோவைக்காய் வெந்த பின் தீயை குறைத்துவிட்டு இட்லி பொடி+கடலைமாவு சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு முறுகலாகும் வரை கிளறி இறக்கவும்.


பி.கு

சாதாரண இட்லி பொடி சேர்த்தும் செய்யலாம்.


Thursday, November 8, 2012


தே.பொருட்கள்
புழுங்கலரிசி - 2 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2  கப்
வறுத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம்,எள் - தலா 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*அரிசியை கழுவி 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பின் பெருங்காயத்தூள்+உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*அதனுடன் பொட்டுக்கடலை மாவு + சீரகம்+எள்+உளுத்தமாவு வெண்ணெய்+சூடான எண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசையவும்.


*கடாயில் எண்ணெய் காயவைத்து முறுக்கு அச்சில் மாவை போட்டு முறுக்குகளாக பிழிந்து சுட்டெடுக்கவும்.


பி.கு
* அரிசியை அதிகநேரம் ஊறவைத்து அரைத்தால் முறுக்கு எண்ணெய் இழுக்கும்.

*விரும்பினால் அரிசி அரைக்கும் போது காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கலாம்.

*பொட்டுக்கடலை மாவு சேர்த்த பிறகும் மாவு பதம் தளர்த்தியாக இருந்தால் ஒரு காட்டன் துணியில் 1/2 மணிநேரம் மாவை வைத்திருந்து எடுத்தால் கெட்டியாக இருக்கும்.

Wednesday, November 7, 2012

 தே.பொருட்கள்

அரிசி மாவு -1/2 கப்
கடலைமாவு - 1/2 கப்
நெய் -1 டேபிள்ஸ்பூன்
சூடான எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கரகரப்பாக பொடித்த மிளகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு -  தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் நீங்கலாக நைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
 *தேவையானளவு நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
 *அதனை காராசேவு கரண்டி அல்லது தேன்குழல் அச்சில் போடவும்.
 *எண்ணெய் காயவைத்து நேரடியாக அச்சினை ஒரு சுற்று மற்றும் சுற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
*ஆறியதும் சிறுதுண்டுகளாக ஒடித்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

பி.கு

*எண்ணெயில் பிழியும்போது ஒருசுற்றுக்கு மேல் பிழிய வேண்டாம்.

Sunday, November 4, 2012

இது ஒரு பிரபலமான ஆர்காட் ஸ்வீட்.குலோப்ஜாமூன் செய்முறை போலவே நட்ஸ் வைத்து ஸ்டப்பிங் செய்வதுதான் இந்த பேடா.

குலோப்ஜாமூன் மிக்ஸ்லயும் செய்யலாம்.அதை விட கோவாவில் செய்வது மிக சுவையாக இருக்கும்.

கோவா செய்முறையினை இங்கே பார்க்கவும்.இதனை நான் இன்ஸ்டண்ட் கோவாவில் செய்துள்ளேன்.

மைக்ரோவேவ் இன்ஸ்டண்ட் கோவா செய்ய

பால் பவுடர் - 1 கப்
தண்ணீர் - 5 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*மேற்கூறிய பொருட்களை மைக்ரோவேவ் பவுலில் ஒன்றாக கட்டியில்லாமல் கலக்கவும்.

*இதனை மைக்ரோவேவில் ஹையில் 6 நிமிடங்கள் வரை வைக்கவும்.ஒவ்வொரு 2 நிமிடங்கள் ஒருமுறை எடுத்து கிளறி  விடவும்.

*இப்போழுது இன்ஸ்டண்ட் இனிப்பில்லாத கோவா ரெடி!!
 பேடா செய்ய

தே.பொருட்கள்

இன்ஸ்டண்ட் இனிப்பில்லாத கோவா - 1 கப்
மைதா - 1/4 கப்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
பால் - தேவைக்கு
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

சர்க்கரை பாகு

சர்க்கரை - 1 கப்
நீர் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - 1 துளி

ஸ்டப்பிங் செய்ய

பாதாம் -5
முந்திரி - 10
பிஸ்தா பருப்பு -10
திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
சாரைப்பருப்பு - 1 டீஸ்பூன்

இவற்றை மிக பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 செய்முறை

*பவுலில் இன்ஸ்டண்ட் கோவா+மைதா+நெய்+பேக்கிங் சோடா இவற்றை ஒன்றாக கலந்து தேவைக்கு பால் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
 *சிறு உருண்டையாக எடுத்து 1 டீஸ்பூன் அளவில் ஸ்டப்பிங் வைத்து உருண்டையை லேசாக அழத்தவும்.
 *இதனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
 *சர்க்கரை பாகு செய்ய 1 கம்பி பதம் வந்ததும் எசன்ஸ் +ஏலக்காய்த்தூள் +பொரித்த பேடா சேர்த்து 3-4 மணிநேரங்கள் வரை ஊறவிட்டு பரிமாறவும்.
பி.கு

*ஸ்டப்பிங் செய்ய மிக முக்கியமானது பூசணி மற்றும் வெள்ளரி விதைகள் தான்.என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை.

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.

Saturday, November 3, 2012

Homemade Rice Flour

0

 தே.பொருட்கள்

பச்சரிசி - 1 கப்

செய்முறை

*அரிசியை கழுவி 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*துணியில் ஈரம் போக நிழலில் உலர்த்தவும்.

 *கொஞ்ச கொஞ்சமாக அரிசியை மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

*பொடித்த மாவை சல்லடையில் சலிக்கவும்.
*சல்லடையில் அரிசி ரவை இருக்கும்,அதனை முறுமுறை அரிசி அரைக்கும் போது சேர்த்து அரைக்கவும்.
 *மாவு நைசாக சலிப்பது மிக முக்கியம்...
 *சலித்த மாவை கடாயில் கொஞ்சமாக போட்டு வறுக்கவும்.
 *மாவு வறுபட்டதும் வாசனை வரும்,அதுவே சரியான பதம்...
 *வறுபட்ட மாவை மீண்டும் சலித்தெடுக்கவும்.
*மாவு நன்கு சூடு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

*இந்த மாவை முறுக்கு,புட்டு,கொழுக்கட்டை,இடியாப்பம் என அனைத்திற்க்கும் பயன்படுத்தலாம்.

பி.கு

*1 கப் அரிசியில் = 2 கப் அரிசிமாவு வரும்.

*மாவை வறுக்காமல் துணியில் மூட்டைக் கட்டி ஆவியிலும் வேகவைத்து எடுக்கலாம்.வேக கிட்டதக்க 1 மணிநேரத்திற்க்கும் மேல் ஆகும்.அடிக்கடி மாவை கிளறிவிடணும்.மாவு வெந்துவிட்டதா என பார்க்க அடியில் இருக்கும் மாவை பிடித்து பார்த்தால் பொலபொலவென கொட்டவேண்டும்.அது சரியான பதம்.ஆறியதும் மீண்டும் மாவை சலித்து ஆறவைத்து பயன்படுத்தவும்.இது கொஞ்சம் கடினமான வேலை அதனால் நான் மாவை வறுத்து விடுவேன்....

*சல்லடையில் 3 கம்பிவலை இருக்கும்,மிக பொடியாக இருக்கும் வலைதான் மாவு சலிக்கும் வலை....

Thursday, November 1, 2012


ரவா லட்டு செய்யும் போது  பால் பவுடர் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று ஒரு புக்கில் படித்தேன்.அதன் படி செய்ததில் நன்றாக இருந்தது.

தே.பொருட்கள்

ரவை  - 1 கப்
பால் பவுடர் - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 3
நெய் - 1/2 கப்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு

செய்முறை
* ரவையை  லேசாக வெறும் கடாயில் வறுக்கவும்.

*சர்க்கரை+ஏலக்காய் இவ்விரண்டையும் நைசாக பொடிக்கவும்.ரவையையும் இவற்றையும் நைசாக பொடிக்கவும்.

*இவற்றுடன் பால் பவுடர்+வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்றாக கலக்கவும்.

*நெய்யை லேசாக சூடு செய்து ரவை கலவையில் ஊற்றி கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.