தே.பொருட்கள்
காலிபிளவர் பூக்கள் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
நசுக்கிய பூண்டுப்பல் -4
கடுகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1கொத்து
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+சீரகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு+வெங்காயம்+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
*பின் காலிபிளவர் பூக்கள்+உப்பு சேர்த்து மூடி போட்டு 10-15நிமிடங்கள் வேகவிடவும்.இடையிடையே கிளறி விடவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.
*காய் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

0 comments:
Post a Comment