Monday, February 27, 2012

 மகியின் குறிப்பை பார்த்து செய்தது.நன்றி மகி!!

தவா புலாவ்

தே.பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
நறுக்கிய காய்கள் - 1 கப் (கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டாணி)
பாவ் பாஜி மசாலா -2 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
தக்காளி - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து தக்காளி+உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.

*பின் தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கியபின் காய்களை போட்டு வதக்கவும்.

*சிறிதளவு மட்டும் நீர் சேர்த்து காய்களை வேகவைக்கவும்.காய்கள் அரை வேக்காடு வெந்தால் போதும்.

*பின் சாதம் சேர்த்து கிளறி எலுமிச்சை சாறு+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

பி.கு

*காலிபிளவர்,குடமிளகாய் சேர்த்தும் செய்யலாம்.மீதமான சாதத்திலும் செய்யலாம்.

சுகினி கேரட் பச்சடி

தே.பொருட்கள்

கேரட்,சுகினி - தலா 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
தயிர் - 250 கிராம்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கேரட்+சுகினியை துருவவும்.அதனுடன் பச்சை மிளகாய்+உப்பு+தயிர் சேர்த்து கிளறி சாட் மசாலாவை மேலே தூவி பரிமாறவும்.

Thursday, February 23, 2012

Flax Seeds/ Linseed/Alsi Seeds தமிழில் இதனை ஆளி விதை என்று சொல்வார்கள்.இதில் அதிகளவு Omega -3 Fatty Acids, Vitamin B, Magnesium, and Manganese இருக்கு.2 வகைகள் இருக்கு ஒன்று ப்ரவுன் கலரிலும்,மற்றொன்று மஞ்சள் கலரிலும் இருக்கும்.

இதில் அதிகளவு நார்சத்தும் இருக்கு.இதனை அப்படியே விதையாக சாப்பிடாமல் பவுடராக அரைத்து  சாப்பிடுவது தான் மிகவும் நல்லது.

கொழுப்பு சத்தினை குறைக்க மிகவும் உதவுகின்றது.கெட்ட கொழுப்பினை குறைத்து,நல்ல கொழுப்பினை அதிகரிக்க உதவுகிறது.சர்க்கரை நோய் உள்ளவர்களும்,கர்ப்பிணிகளும் சாப்பிடுவது நல்லது.

இதில் இட்லி பொடி செய்தேன்,மிகவும் நன்றாக இருந்தது.

தே.பொருட்கள்
ஆளி விதை - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயம் - சிறு கட்டி
உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,தனியா - தலா 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -1/4 டீஸ்பூன்

செய்முறை
*பெருங்காயம்+கா.மிளகாய் தவிர அனைத்தையும் வெரும் கடாயில் வறுக்கவும்.

*சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து ,பின் கா.மிளகாயை வறுக்கவும்.

*அனைத்தையும் ஆறியதும் ஒன்றாக உப்பு சேர்த்து அரைக்கவும்.

பி.கு

இந்த பொடியை உருளை,வாழைக்காய் வறுக்கும் போது இந்த பொடியை தூவி வறுக்கலாம்.

Monday, February 20, 2012

இந்த ரெசிபி பாதாம் பேடாக்காக செய்தது.நேரமும் பொறுமையும் இல்லாததால் பேடா போல் செய்யாமல் அல்வா போல சாப்டாச்சு..நன்றி ஜெயந்தி!!

தே.பொருட்கள்

பாதாம் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் பவுடர் -1/2 கப்
நெய் -4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
ஆரஞ்சு கலர் - 1துளி

செய்முறை
*பாதாம் பருப்பை கொதிக்கும் நீரில் 1/2 மணிநேரம் ஊறவைத்து தோலுரிக்கவும்.

*அதனை சிறிது பால் சேர்த்து மைய அரைக்கவும்.

*மேலும் அதனுடன் பால் பவுடர்+சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.

*நான்ஸ்டிக் கடாயில் நெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து கைவிடாமல் கிளறிவிடவும்.

*சிறிது கெட்டியாக வரும் போது கலர்+ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

*கடாயில் கெட்டியாகி ஒட்டாமல் வரும் போது இறக்கி தட்டில் சமமாக கொட்டி ஆறவிட்டு பரிமாறவும்.

பேடா போல் செய்ய

*நன்கு ஆறியதும் சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி,நடுவில் லேசாக அழுத்தி விடவும்.

*அதன் நடுவில் பாதாம்,பிஸ்தா வைத்து அலங்கரித்து பரிமாறலாம்.


Wednesday, February 15, 2012

கரம் மசாலா

தே.பொருட்கள்
லவங்கம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய்,சீரகம்,சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்
பட்டை -2
தனியா - 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*இவை அனைத்தையும் வெறும் கடாயில் லேசாக வறுத்து பொடி செய்யவும்.
நன்றி answers.yahoo .com !!

பாவ் பாஜி மசாலா

தே.பொருட்கள்
கறுப்பு ஏலக்காய் - 3
சீரகம் -  1 டேபிள்ஸ்பூன்
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -4
ஆம்சூர் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 3 இஞ்ச்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சுக்கு - 1 துண்டு
கரம் மசாலா - 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை
*ஆம்சூர் பொடி+கரம் மசாலா+பெருங்காயத்தூள்  தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்து பொடி செய்யவும்.கடைசியாக ஆம்சூர் பவுடர்+கரம் மசாலா+பெருங்காயத்தூள்  சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.

Sunday, February 12, 2012

தே.பொருட்கள்

நெத்திலி மீன் - 1/4 கிலோ
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
கடலைமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*மீனை சுத்தம் செய்து நன்கு வடிக்கட்டவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Wednesday, February 8, 2012

பஞ்சாமிர்தம் தமிழ் கடவுளான முருகனின் ஸ்பெஷல் நைவேத்தியம்.தைப்பூசத்திருநாளான நேற்று என் வாழ்வில் மறக்க முடியாத ஸ்பெஷல் நாள்.அதற்காக நேற்று பஞ்சாமிர்தம் செய்து முருகனுக்கு நைவேத்தியம் செய்து படைத்தேன்.அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்பெஷல் ரெசிபி எனது 600வது பதிவு!!

தே.பொருட்கள்

வாழைப்பழம் -3
ப்ரவுன் சர்க்கரை - 1/2 கப் (அ) இனிப்பிற்கேற்ப
பேரிச்சம்பழம் - 20
சிகப்பு ஆப்பிள் -1
உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
கல்கண்டு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும்.பேரிச்சயை விதை நீக்கி பொடியாக அரியவும்.

*ஆப்பிளை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

*இதனுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.

பி.கு
துருவிய ஆப்பிளுக்கு பதில் தேன் சேர்க்கவும்.என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை.தேன் சேர்க்கும் போது சர்க்கரையின் அளவை குறைத்து போடவும்.

Monday, February 6, 2012

குடும்பமலர் வார இதழில் பார்த்து செய்தது....

தே.பொருட்கள்
துருவிய முட்டைகோஸ் - 2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் -1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -2
பொடியாக அரிந்த கொத்தமலித்தழை - சிறிது
கறிவேப்பிலை -1 கொத்து
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
கடலைமாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

செய்முறை

*துருவிய கோஸை சிறிது உப்பு சேர்த்து பிசறி 15நிமிடம் வைக்கவும்.

*பின் அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்று சேர்த்து பிசையவும்.

*நீர் ஊற்றி பிசைய தேவையில்லை,கோஸில் இருக்கும் நீரே போதுமானதாக இருக்கும்.

*எண்ணெய் காயவைத்து பகோடாகளாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*மிகவும் சுவையானதாக இருக்கும் இந்த பகோடா...

Wednesday, February 1, 2012

 தே.பொருட்கள்
துவரம்பருப்பு - 1கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 4
மணத்தக்காளிகீரை - 1 சிறிய கட்டு
வெங்காயம்.தக்காளி - தலா 1
புளிகரைசல் - 1/2 கப்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க
காய்ந்த மிளகாய் - 2
மிளகு,சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
தனியா - 1 டேபிள்ச்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4டீஸ்பூன்


செய்முறை
*மணத்தக்காளிக்கீரையில் இருக்கும் விதைகளை தனியாக எடுத்து வைக்கவும்.


*பருப்பை மஞ்சள்தூள்+பூண்டு+கீரை விதை சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.
 *கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.வெங்காயம்+தக்காளியையும் நறுக்கவும்.
 *பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+கீரை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் பொடித்த பொடியிலிருந்து 1டேபிள்ஸ்பூன் +வேகவைத்த பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

பி.கு

*எந்த கீரை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.கீரைக்கு பதில் விரும்பிய காய்களும் சேர்த்து செய்யலாம்.