Flax Seeds/ Linseed/Alsi Seeds தமிழில் இதனை ஆளி விதை என்று சொல்வார்கள்.இதில் அதிகளவு Omega -3 Fatty Acids, Vitamin B, Magnesium, and Manganese இருக்கு.2 வகைகள் இருக்கு ஒன்று ப்ரவுன் கலரிலும்,மற்றொன்று மஞ்சள் கலரிலும் இருக்கும்.
இதில் அதிகளவு நார்சத்தும் இருக்கு.இதனை அப்படியே விதையாக சாப்பிடாமல் பவுடராக அரைத்து சாப்பிடுவது தான் மிகவும் நல்லது.
கொழுப்பு சத்தினை குறைக்க மிகவும் உதவுகின்றது.கெட்ட கொழுப்பினை குறைத்து,நல்ல கொழுப்பினை அதிகரிக்க உதவுகிறது.சர்க்கரை நோய் உள்ளவர்களும்,கர்ப்பிணிகளும் சாப்பிடுவது நல்லது.
இதில் இட்லி பொடி செய்தேன்,மிகவும் நன்றாக இருந்தது.
தே.பொருட்கள்
ஆளி விதை - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயம் - சிறு கட்டி
உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,தனியா - தலா 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -1/4 டீஸ்பூன்
செய்முறை
*பெருங்காயம்+கா.மிளகாய் தவிர அனைத்தையும் வெரும் கடாயில் வறுக்கவும்.
*சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து ,பின் கா.மிளகாயை வறுக்கவும்.
*அனைத்தையும் ஆறியதும் ஒன்றாக உப்பு சேர்த்து அரைக்கவும்.
பி.கு
இந்த பொடியை உருளை,வாழைக்காய் வறுக்கும் போது இந்த பொடியை தூவி வறுக்கலாம்.

0 comments:
Post a Comment