Wednesday, February 2, 2011

கொள்ளு ரசம் / Kollu(Horsegram) Rasam


தே.பொருட்கள்:

கொள்ளு வேகவைத்த நீர் - 3 கப்
சின்ன வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1/4 கப்
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
நசுக்கிய பூண்டுப்பல் - 3
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

பொடிக்க:

சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
தனியா - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் -4

செய்முறை :
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+கறிவேப்பிலை+கீறிய பச்சை மிளகாய்+தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் புளிகரைசல்+ரசப்பொடி+மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*பின் கொள்ளு வேகவைத்த நீரை சேர்த்து கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.

*இதை சூப்பாகவும் குடிக்கலாம்.இந்த முறையில் செய்ததில் சூப்பர்ர் ருசியில் இருந்தது.

0 comments:

Post a Comment