
தே.பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 பெரியது
ரசப்பொடி - 1 டேபிள்ஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் - 4
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*உருளைகிழங்கை தோல் சீவி நறுக்கி கொள்ளவும்.
*கடாயில் எண்ணெயில் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து பூண்டுப்பல் போட்டு வதக்கவும்.
*பின் ரசப்பொடியை போட்டு 1 நிமிடத்தில் உருளைக்கிழங்கு,உப்பு சேர்த்து தட்டு போட்டு மூடி சிம்மில் வைத்து வேகவிடவும்.
*தண்ணீர் ஊற்றகூடாது,நடுவில் கிளறி விடவும்.
*உருளைவெந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.
0 comments:
Post a Comment