Thursday, February 17, 2011

ஹைதராபாத் சிக்கன் 65 / Hyderabad Chicken 65

 தே.பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
முட்டையின் வெள்ளைக் கரு - 1
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிகப்பு கலர் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
கீறிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:*சிக்கனில் உப்பு+முட்டை வெள்ளைக் கரு+சிகப்பு கலர்+மிளகாய்த்தூள்+சோளமாவு+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 மணிநேரம் ஊறவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*ஒரு கிண்ணத்தில் தயிர்+மஞ்சள் கலர்+உப்பு+மிளகுத்தூள்+சீரகத்தூள்+கரம்மசாலா அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கீறிய பச்சை மிளகாய்+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தயிர் கலவையை ஊற்றவும்.இதனுடன் பொரித்த சிக்கனை சேர்த்து நன்கு சுண்டும் வரை கிளறி இறக்கவும்.

0 comments:

Post a Comment