Thursday, February 10, 2011

அன்னாசிப்பழ ரசம் / Pineapple Rasam


தே.பொருட்கள்

அன்னாசிப்பழ துண்டுகள் - 1/2 + 1/4 கப்
தக்காளி - 1
புளிகரைசல் - 1 கப்
ரசப்பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிது
தேங்காய்ப்பால் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

நெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*1/2 கப் அன்னாசிபழத்திலிருந்து சாறு பிழியவும்.

*தக்காளியை சிறுதுண்டுகளாகி சிறிதுநீர் சேர்த்து பாத்திரத்தில் வேகவிடவும்.
* தக்காளி வெந்ததும் புளிகரைசல் +உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*பின் வேகவைத்த துவரம்பருப்பு+ரசப்பொடி சேர்த்து 5நிமிடம் கொதிக்கவிடவும்.
*பின் அன்னாச்சிபழசாறு சேர்த்து இறக்கவும். 
*கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டி மீதமுள்ள அன்னாசிப்பழ துண்டுகள்+தேங்காய்ப்பால்+கொத்தமல்லித்தழை இவைகளை சேர்க்கவும்.

*கமகம வாசனையோடு ரசம் தயார்..சூப் போலவும் அப்படியே குடிக்கலாம்.


0 comments:

Post a Comment