Wednesday, August 29, 2012

முட்டையில்லாத கேக் செய்யும் போது  நான் தயிர் அல்லது பால் ஏதாவது ஒன்று சேர்த்து செய்வேன்.இந்த முறை இவையிரண்டும் சேர்க்காமல் நீர் சேர்த்து செய்தேன்.கேக் நான் எதிர் பார்த்ததை விட மிகவும் மிருதுவாக சூப்பரா இருந்தது.இந்த  அளவில் 8 மஃபின்ஸ் வரும்.

தே.பொருட்கள்

Self Raising Flour -3/4 கப்
கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
வெஜிடேபிள் எண்ணெய் - 1/4 கப்
வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்
வெள்ளை வினிகர் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*அவனை 180°C  முற்சூடு செய்யவும்.

*மாவுடன் +பேக்கிங் சோடா+ கோகோ பவுடர் கலந்து சலிக்கவும்.
*ஒரு பவுலில் தண்ணீர்+சர்க்கரை+எண்ணெய்  சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும்  கோகோ கலவையை சிறிது சிறிதாக கட்டியில்லாமல் கலக்கவும்.

*கடைசியாக வினிகர் கலந்து மஃபின் கப்களில் 3/4 பாகம் வரை ஊற்றவும்.

*காலியான மஃபின் இடங்களில் தண்ணீர் ஊற்றி   30 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
பி.கு

*முட்டையில் செய்ததை போலவே இந்த கேக் நன்கு உப்பி வரும்.


*Self Raising Flour = 1 கப் மைதா + 1 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் + 1/2 டீஸ்பூன் உப்பு




Monday, August 27, 2012

நாம் வழக்கமாக கேழ்வரகு,அரிசிமாவில் தான் புட்டு செய்வோம்.ஒரு மாறுதலுக்காக கோதுமை மாவில் புட்டு செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.நன்றி சங்கீதா!!

தே.பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள்+உப்பு  -தலா 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கோதுமைமாவை கடாயில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.

*ஆறியதும் உப்பு கலந்து வெந்நீர் சேர்த்து தெளித்து உதிரியாக வரும் வரை பிசையவும்.

*கையால் உருண்டை  பிடித்தால் உதிரியாக விழவேண்டும்,அதுவே பதம்.

*அதனை ஆவியில் 10 நிமிடம் வேகவைத்தெடுக்கவும்.

*மாவை கட்டியில்லாமல் பிசையவும். கட்டியுள்ள மாவை இளஞ்சூடாக இருக்கும் போதே மாவினை மிக்ஸியில் போட்டு விப்பரில் 1 சுற்று சுற்றி எடுத்தால் நன்கு உதிரியாக இருக்கும்.

*பின் அதனுடன் மீதமுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறவும்.

பி.கு
*சர்க்கரை பதில் ப்ரவுன் சர்க்கரையை பயன்படுத்தினால் புட்டு இன்னும் சுவையாக இருக்கும்.

Monday, August 20, 2012

 எனக்கும்,என் பொண்ணுக்கும் ரொம்ப பிடித்தமான ரொட்டி இது.ஈஸ்ட் மற்றும் முட்டை சேர்க்காமல் சீஸ் நாண்,பட்டர் நாண்,கார்லிக் நாண்,சோயா கீமா நாண் என 4 வகைகளில் செய்துள்ளேன்....இந்த அளவில் 4 நாண்கள் வரும்.

தே.பொருட்கள்

மைதா - 2 கப்
பேக்கிங் பவுடர் -  1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*மைதா+உப்பு+பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாக கலக்கவும்.

*தயிருடன் மைதா கலவையை கலந்து தேவையான நீர் சேர்த்து சற்று தளர்த்தியான பதத்தில் பிசையவும்.

*கடைசியாக எலுமிச்சை சாறை மாவில் கலந்து நன்கு பிசையவும்.

*அதனை ஈரத்துணியால மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.
 *6-7 மணிநேரங்களில் மாவு இரு மடங்காக உப்பியிருக்கும்.
 *உப்பியிருக்கும் மாவை மீண்டும் கைகளால் மிருதுவாக பிசையவும்.

*அதனை 4 சம உருண்டைகளாக பிரிக்கவும்.

*மைதா மாவை பலகையில் தூவி ஒரு உருண்டையை எடுத்து கைகளில் ஒட்டாதவாறு பிசையவும்.

பட்டர் நாண் / Butter Naan

*ஒவல் வடிவத்தில் உருண்டையை கைகளால் இழுக்கவும்.
 *ஒரு பக்கத்தில் தண்ணீர் தடவி,நான் ஸ்டிக் கடாயை அடுப்பில் காயவைத்து தண்ணீர் தடவிய பக்கத்தை கடாயில் படுமாறு வைக்கவும்.
*அடிப்பக்கம் வெந்ததில் அடையாளமாக பப்பிள்ஸ் வரும்,உடனை தவாவை திருப்பி  நேரடியாக அடுப்பில் காட்டவும்.

*நாண் வெந்ததும் தானாகவே கடாயிலிருந்து வந்துவிடும்.

*கவனமாக காட்டவேண்டும்,இல்லையெனில் நாண் தீய்ந்துவிடும்.

*மேல் பக்கத்தில் உருகிய பட்டரை ப்ரெஷ்ஷால் தடவி விடவும்.

*இப்போழுது பட்டர் நாண் ரெடி!!

கார்லிக் நாண்/Garlic Naan

துருவிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை -சிறிது

*பட்டர் நாண் செய்தததைப் போலவே ஓவல் வடிவத்தில் செய்து அதன் மேல் பூண்டி+கொத்தமல்லித்தழை தூவி சப்பாத்தி உருட்டும் கருவியால் லேசாக உருட்டிவிடவும்.

*அப்போழுதுதான் அடுப்பில் காட்டும் போது பூண்டு+ கொத்தமல்லிதழை கொட்டாது.

*பட்டர் நாண் செய்ததை போலவே செய்து வெந்த பக்கத்தில் பட்டரை தடவி விடவும்.
 சோயா கீமா நாண் /Soya Kheema Naan

சோயா உருண்டைகள் -5
பொடியாக அரிந்த வெங்காயம் -2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது+கரம் மசாலா - தலா 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிது

*கொதிக்கும் நீரில் சோயா உருண்டைகளைப் போட்டு 10 நிமிடம் கழித்து நீரை வடிகட்டி குளிர்ந்த நீரில் நன்கு அலசி நீரை பிழியவும்.

*அதனை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+கரம் மசாலா +உப்பு சேர்த்து வதக்கவும். 

*வதங்கியதும் உதிர்த்த சோயாவை சேர்த்து நங்கு உதிரியாக வரும் வரை வதக்கி கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.


*ஒரு உருண்டையை எடுத்து சோயா கலவையை வைத்து ஓவல் வடிவத்தில் செய்யவும்.

*ஸ்டப்பிங் வெளியே வராதபடி செய்யவும்.

* பட்டர் நாண் செய்ததை போலவே செய்யவும்.
 சீஸ் நாண்/Cheese Naan

சீஸ் துண்டுகள்

*ஒரு உருண்டையை எடுத்து சீஸினை வைத்து மெதுவாக உருட்டி இழுக்கவும்.
 *இல்லையெனில் சீஸ் உருகி வெளியே வந்துவிடும்,பட்டர் நாண் செய்ததை போலவே செய்யவும்.
*விருப்பமான க்ரேவியுடன் பரிமாறவும்.

பி.கு

*சோயா ஸ்டப்பிங் பதில் சிக்கன் கீமா அல்லது மட்டன் கீமா வைத்து செய்யலாம்.அப்படி செய்யும் போது ஸ்டப்பிங் நன்கு டிரையாக இருக்கவேண்டும்.

*சோயா உருண்டைக்கு பதில் சோயா க்ரனுல்ஸூம் பயன்படுத்தலாம்.

*ஒவ்வொறு நாண் வெந்த பிறகு ப்ரெஷ்ஷால் உருகிய பட்டரை தடவி விடவும்.

Monday, August 13, 2012

காராசாரமான நெல்லிக்காய் ரசம் உடலுக்கு மிகவும் நல்லது.நன்றி ஏஞ்சலின்!!

தே.பொருட்கள்

நெல்லிக்காய் - 5
தக்காளி - 1
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
ரசப்பொடி - 2 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1 டீஸ்பூன்
நசிக்கிய பூண்டுப்பல் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - சிறிது

செய்முறை

*நெல்லிக்காயை துருவிக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து தக்காளி+உப்பு+பூண்டுப்பல்+சுக்குத்தூள்+மஞ்சள்த்தூள்+தூவிய நெல்லிக்காய்  சேர்த்து வதக்கி 2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் ரசப்பொடி+வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

Tuesday, August 7, 2012

 இந்த வருட கிருஷ்ண ஜெயந்தி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.அதற்காக ஸ்பெஷலா செய்யனும்னு நினைத்த போது கை முறுக்கு செய்ய ஆசை வந்துடுச்சு.முதன்முதலாக முயற்சி செய்தது.பல யூடியூப் வீடியோகளை பார்த்து முயற்சி செய்தது.ஷேப் சரியாக வரவில்லை ஆனாலும் இனி அடிக்கடி செய்யும்போது சரியா வந்துடும்னு நினைக்கிறேன்...

முதல் முறையாக செய்ததால் 1/2 கப் அரிசியில் மட்டும் செய்து பார்த்தேன்.

தே.பொருட்கள்

பச்சரிசி -1/2 கப்
வறுத்தரைத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க

செய்முறை

*அரிசியை கழுவி 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*துணியில் ஈரம் போக உலர்த்தி,மிக்ஸியில் மாவாக நைசாக அரைக்கவும்.

*அதனுடன்  மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக தேவையான நீர் சேர்த்து பிசையவும். 
 *சிறு உருண்டை அளவில் மாவை எடுத்து பேப்பரில், பாட்டில் மேல்மூடி வைத்து மாவை முறுக்கி வட்டமாக சுற்றி விடவும்.

 *சிறிது நேரம் உலரவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பி.கு

*இந்த முறுக்கிற்கு அரிசிமாவை ஈரபதமாகதான் பயன்படுத்த வேண்டும்.மாவை வறுக்ககூடாது.

*1/2 கப் அரிசியில் 1 கப் அளவிற்க்கு அரிசிமாவு வரும்.

*நெய் பயன்படுத்தினால் முறுக்கு சிவந்துவிடும்,அதனால் முறுக்கிற்கு எப்போழுதும் வெண்ணெயை பயன்படுத்தவும்.

*தேங்காய் எண்ணெய் சிறிது சேர்ப்பதால் நன்கு வாசனையுடன் இருக்கும்.

*மாவை சுற்றும்போது கையில் எண்ணெய் தடவி சுற்றினால் ஈசியாக சுற்ற வரும்.

*நான் ரெடிமேட் உளுத்தமாவு பயன்படுத்தியிருக்கிறேன்.உளுத்தமாவு இல்லையெனில் உளுந்தை வெறும் கடாயில் வாசனை வறும் வரை வறுத்து நைசாக பொடிக்கவும்.