Friday, December 12, 2014

தே.பொருட்கள்:
கத்திரிக்காய் - 1 பெரியது
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது

செய்முறை:
*கத்திரிக்காயில் எண்ணெய் தடவி காஸடுப்பில் சுட்டெடுக்கவும்.

*ஆறியதும் தோலை எடுத்துவிட்டு மசித்துக்கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+தனியாத்தூள்+மஞ்சள்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் மசித்த கத்திரிக்காயை சேர்த்து நன்கு கிளறி 1/2 கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.

*கொதித்து திக்காக வரும் போது மல்லித்தழை தூவி இறக்கவும்.

*சப்பாத்தி,தோசையுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

Monday, May 12, 2014

தே.பொருட்கள்

சாதம் - 2 கப்
 மிளகு + சீரகம் - தலா 1 டேபிள்ஸ்பூன்
நெய் + நல்லெண்ணெய் - தலா 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி -1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு

செய்முறை
*மிளகு+ சீரகத்தை பொடிக்கவும்.

*கடாயில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சாதம்+உப்பு+பொடித்த மிளகு சீரகம் சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு
*இதேபோல் சாதத்துக்கு பதில் அவல் -இல் செய்யலாம்.

Thursday, May 8, 2014

Recipe Source : Aayi's Recipe

நான் கொடுத்துள்ள அளவில் 2 நபர் சாப்பிடலாம்.

தே.பொருட்கள்

சாட் பூரி - 10
இனிப்பு +க்ரீன் சட்னி - தலா 1 டேபிள்ஸ்பூன்
ஓமப்பொடி/சேவ் - மேலே தூவ
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்
கேரட் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்த்ழை - 2 டேபிள்ஸ்பூன்

க்ரேவி/ராக்தா செய்ய

மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
காய்ந்த பச்சை பட்டாணி -1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

வெறும் கடாயில் வறுக்க

கிராம்பு -2
பட்டை - 1 சிறுதுண்டு
தனியா - 1/2 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
மிளகு -1/8 டீஸ்பூன்
ஜாதிக்காய் -மிகசிறிய அளவு
மராத்தி மொக்கு - 2

மராத்தி மொக்கு பதில் அன்னாச்சி மொக்கு -1 சேர்த்தேன்.

செய்முறை

*பச்சை பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*வறுக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து அதனுடன் மிளகய்த்தூள்+தேங்காய்த்துறுவல்+வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் அரைத்த விழுது +1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.பின் பச்சை பட்டாணியை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.

*க்ரேவி தண்ணியாக இல்லாமலும் கெட்டியாக இல்லாமலும் இருக்கவேண்டும்.

பரிமாறும்முறை

*ஒரு சிறியதட்டில் பூரியை நொறுக்கி போடவும்.
*அதன்மேல் சூடான் க்ரேவியை ஊற்றவும்.
*அதன் மேல் வெங்காயம்+தக்காளி+கேரட் துறுவல்+சட்னிகள்+சேவ்+கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
பி.கு

*க்ரேவி பரிமாறும் போது சூடாக இருக்கவேண்டும். இதற்க்கு காய்ந்த பச்சை பட்டாணிதான் சிறந்தது.

Monday, May 5, 2014

Recipe Source: Indianrecipevideo
தே.பொருட்கள்

ரவை - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
பேக்கிங் பவுடர் -1/4 டீஸ்பூன்
நீர் -1/4 கப்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*பவுலில் நீர் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திதிற்க்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி 20 நிமிடங்கள் வைக்கவும்.
*20 நிமிடங்கள் கழித்து மாவை நன்கு பிசைந்து எலுமிச்சை பழளவு உருண்டை எடுத்து நன்கு மெலிதாக  உருட்டி குக்கீ கட்டரால் வெட்டு எடுக்கவும்.

*உருட்டும் போது மாவு ஒட்டினால் நெய் தடவி உருட்டவும்.
*பூரிகளை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*உப்பிய பூரிகளை பானி பூரி ,தஹி பூரிக்கும்,உப்பாத பூரிகளை பேல்பூரிக்கும் பயன்படுத்தலாம்.

பி.கு

*விரும்பினால் பூரி பொன்னிறமாக வேண்டுமானால் மாவு பிசையும் 1 டேபிள்ஸ்பூன் உளுத்தமாவு சேர்த்து பிசையலாம்.

*பூரிகளை காற்றுபுகாத டப்பாவில் 10 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*இந்த அளவில் 16 பூரிகள் வரும்.

Monday, April 28, 2014

தே.பொருட்கள்

சின்ன வெங்காயம் - 8
பூண்டுப்பல் - 10
புளிவிழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மணத்தக்காளி வத்தல் + நல்லெண்ணெய் - தலா 1/4 கப்

தாளிக்க

வடகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயப்பொடி - 1/4 டீஸ்பூன்

செய்முறை

*புளிவிழுதில் 2 கப் நீர் விட்டு மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து கரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மணத்தக்காளிவத்தல்+பூண்டு+வெங்காயம் சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

Wednesday, April 16, 2014

 ப்லான்/ காரமல் கஸ்டர் மிகவும் பிரபலமான டெசர்ட்..

தே.பொருட்கள்

பால் - 2 கப்
முட்டை -3
சர்க்கரை - 1/2 கப்
வெனிலா எசன்ஸ் -1 டேபிள்ஸ்பூன்

காரமல் செய்ய

ப்ரவுன் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
நீர் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.அதனுடன் சர்க்கரை+எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
 *பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.மிதமான சூட்டில் முட்டையில் வடிகட்டி கலக்கவும். (சூட்டோடு பாலை கலந்தால் முட்டை திரிந்துவிடும்.)
 *கடாயில் ப்ரவுன் சுகரை போட்டு கரைந்ததும் நீர் சேர்த்து கலக்கி மோல்டில் ஊற்றி பரவலாக சுற்றி விடவும்.
 *அதன் மேல் முட்டை கலவையை ஊற்றவும்.
 *160°C முற்சூடு செய்த அவனில் 45-50 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.கத்தியில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும்.
*பேக் செய்து எடுத்ததும் ஆறியதும் ப்ரிட்ஜில் 3-4 மனிநேரம் குளிரவைத்து பரிமாறவும்.

பி.கு

*இதனை கேரமல் இல்லாமமும் செய்யலாம்.அதற்கு பதில் மோல்டில் வெண்ணெய் தடவி முட்டை கலவையை ஊற்றி பேக் செய்யவும்.

*ஒரே மோல்டில் ஊற்றாமல்  Ramkin கப்களில் கேரமலை சிறிது ஊற்றி அதன் மேல் முட்டை கலவையை 3/4 பாகம் வரை ஊற்றியும் பேக் செய்யலாம்.அப்படி செய்யம் போது பேக்கிங் டிரேயில் சிறிது தண்ணீர் ஊற்றி அதன்மேல் Ramkin கப்களை வைத்து பேக் செய்ய வேண்டும்.

Monday, March 31, 2014

தே.பொருட்கள்

சுத்தம் செய்த நண்டு - 7
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கரம்மசாலா - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -7

செய்முறை
*காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.தேங்காய்த்துறுவல்+கசகசா+பெருஞ்சீரகம்+கரம்மசாலா இவற்றையும் விழுதாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+காய்ந்த மிளகாய் விழுது என் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் மஞ்சள்தூள்+உப்பு+நண்டு சேர்த்து வதக்கி தேவையானளவு நீர் சேர்த்து வேகவிடவும்.

*நண்டு வெந்ததும் தேங்காய் மசாலா சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கவும்.

பி.கு

*நண்டு சீக்கிரம் வெந்துவிடும் அதனால் குறைவான நீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.

*எப்போழுதும் நண்டை சமைக்கும் நேரத்தில்தான் சுத்தம் செய்து சமைக்கவேண்டும்.முன்பே சுத்தம் செய்துவிட்டால் நண்டின் சுவையே மாறிவிடும்.

*இதில் காய்ந்த மிளகாய் பதில் வரமிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.



 

Monday, March 24, 2014

 Recipe Source : Muthisidharal
தே.பொருட்கள்
அரிசி  - 2 கப்
அரிந்த சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டுப்பல் - 2 டேபிள்ஸ்பூன்
முருங்கைகீரை - 1 கப்
முருங்கைகாய் - 3
நீளமாகவும் மெலிதாக அரிந்த பிஞ்சு கத்திரிக்காய் - 2 கப்
அரிந்த தக்காளி -2 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க
தனியா+கடலைப்பருப்பு+சோம்பு - தலா 1 டீஸ்பூன்
கசகசா+மிளகு -தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -5
பட்டை+கிராம்பு -தலா 1

செய்முறை

*அரிசியை கழுவி சிரிது நெய்யில் வறுத்து உப்பு+4 கப் நீர் சேர்த்து புலவு போல் செய்து கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் +2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சீரகம்  சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம்+பூண்டு+தக்காளி+முருங்கைகீரை+கத்திரிக்காய்+துண்டுகளாகிய முருங்கைக்காய்+கரிவேப்பிலை+மஞ்சள்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சிறுதீயில் சமைக்கவும்.

*முருங்கைக்காய் வெந்ததும் மசாலா கெட்டியாகி என்ணெய் மேலே மிதந்து வரும் போது பொடித்த பொடி +மீதமிருக்கும் நெய் சேர்த்து வதக்கவும்.

*இந்த கலவையில் சாதத்தை சேர்த்து சிறுதீயில் கிளறி இறக்கவும்.

*சுவையான இந்த சாதத்துக்கு உருளை வறுவல்+அப்பளம்+ஊறுகாய்  சூப்பர் காம்பினேஷன்.

Monday, February 24, 2014

Recipe Source :Umaskitchenexperiments

தே.பொருட்கள்

புழுங்கலரிசி - 1 கப்
உடைத்த கறுப்பு உளுந்து - 1/2 கப்
நீர் - 3 கப்
பூண்டுப்பல் - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*அரிசி+உளுந்து இவ்விரண்டையும் கழுவி 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*குக்கரில் ஊறவைத்த  அரிசி +உளுந்து மற்றும் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து 3 விசில்வரை வேகவைத்து எடுக்கவும்.

*இதற்கு காரகுழம்பு அல்லது வத்தக்குழம்பு பெஸ்ட் காம்பினேஷன்.

Thursday, February 20, 2014

Recipe Source : Chettinadrecipes

தே.பொருட்கள்

கம்பு - 4.5 டேபிள்ஸ்பூன்
கேழ்வரகு - 4.5 டேபிள்ஸ்பூன்
சோளம் - 3 டேபிள்ஸ்பூன்
புழுங்கலரிசி - 1.5 டேபிள்ஸ்பூன்
பார்லி + ஜவ்வரிசி +வேர்க்கடலை - தலா 1.5 டேபிள்ஸ்பூன்
பச்சைபயிறு+கோதுமை+கொள்ளு - தலா 1.5 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1.5 டேபிள்ஸ்பூன்
பாதாம்+முந்திரி+ஏலக்காய் - தலா 4

செய்முறை

*அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
*2 டீஸ்பூன் சத்துமாவை பாலில் கலந்து கொதிக்கவைத்து சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.

பி.கு
*இதில் கேழ்வரகுக்கு பதில் நான் கேழ்வரகு மாவை லேசாக வறுத்து இந்த மாவில் கலந்துக் கொண்டேன்.

*மேலும் இதில் சோயா பீன்ஸ் மற்றும் Jowar சேர்க்கலாம்.

*புழுங்கலரிசிக்கு பதில் கைக்குத்தல் அரிசி சேர்க்கலாம்.

*இந்த அளவில் 2.5 கப் மாவு வரும்.