Tuesday, August 31, 2010


இந்த குறிப்பை அடுப்பில் வைத்து சமைக்காமலேயே செய்யலாம்.விருப்பபட்டால் தாளித்துக்கொள்ளலாம்.

தே.பொருட்கள்:
அவல் - 1 கப்
தயிர் - 2 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
துருவிய கேரட்,வெள்ளரிக்காய் - தலா 1/4 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


செய்முறை :

*அவலைக் கழுவி 10 நிமிடம் நீரில் ஊறவைக்கவும்.

*பின் அவலில் இருக்கும் நீரை நன்கு பிழிந்து மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறவும்.

*விருப்பப்பட்டால் நறுக்கிய கறிவேப்பிலை+கொத்தமலி+மாங்காய்+மாதுளை முத்துக்கள் சேர்க்கலாம்.

Monday, August 30, 2010

தே.பொருட்கள்:
பயத்தமாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
வறுத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் - 1 1 /2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய்த் தவிர அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து நீர் விட்டு கெட்டியாக பிசையவும்.

*முறுக்கு அச்சில் மாவை பிழிந்து முறுக்குகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Friday, August 27, 2010


தே.பொருட்கள்:
புட்டு மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு
பேரிச்சம்பழம் - 4
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*புட்டு மாவில் உப்பு சேர்த்து கலந்து சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசையவும்.கையால் எடுக்கும் போது உதிரி உதிரியாக பிசைந்த மாவு இருக்க வேண்டும்.

*இட்லி பாத்திரத்தில் அதனை ஆவியில் வேகவைக்கவும்.இடைஇடையே மாவை கிளறி விடவும்.வெந்ததும் இறக்கவும்.

*ஒரு கடாயில் 1 கை நீர் தெளித்து சர்க்கரையை போட்டு கரைய விடவும்.கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி நெய்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வெந்த மாவை அதில் கொட்டி தேங்காய்த்துறுவல்+முந்திரி+நறுக்கிய பேரிச்சம்பழம் சேர்த்து கிளறி விடவும்.

Thursday, August 26, 2010

மெது பகோடா

0
தே.பொருட்கள்:
கடலைமாவு - 1 கப்
அரிசிமாவு - 1/4 கப்
டால்டா - 25 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
சமையல் சோடா - 1 சிட்டிகை
சூடான எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் டால்டா+உப்பு+சமையல் சோடா சேர்த்து நன்கு பிசையவும்.

*இதனுடன் வெங்காயம்+பச்சை மிளகாய்+கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து மாவு வகைகளை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*வாணலில் எண்ணெய் காயவைத்து மாவை பகோடாகளாக பொரித்து எடுக்கவும்.

Wednesday, August 25, 2010

தே.பொருட்கள்:
 
சிக்கன் - 1/2 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 10
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
பொடியாக நறுக்கிய புதினா,கொத்தமல்லி - 1 கைப்பிடி
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வேகவைத்து துண்டுகளாகிய உருளைக்கிழங்கு - 2 பெரியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2

செய்முறை :
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+மஞ்சள்தூள்+தனியாத்தூள்+புதினா கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் சிக்கன்+உப்பு சேர்த்து மேலும் வதக்கி தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

*சிக்கன் வெந்ததும் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

Tuesday, August 24, 2010

ரசப்பொடி

0
தே.பொருட்கள்:
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டேபிள்பூன்
சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
 
செய்முறை:
*அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்து கொரகொரப்பாக அரைக்கவும்.

பி.கு:
இதனுடன் கொள்ளு 1 டேபிள்ஸ்பூன் +1/4 டீஸ்பூன் வெந்தயம் வெறும் கடாயில் வறுத்து இதனுடன் பொடித்தால் கொள்ளு ரசப்பொடி தயார்...

Monday, August 23, 2010

தே.பொருட்கள்:
பனீர் துண்டுகள் - 100 கிராம்
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்தரைக்க:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டுபல் - 5
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.

*பனீர் துண்டுகளை எண்ணெயில் பொரித்து குளிர்ந்த நீரில் 1 நிமிடம் போட்டு எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+அரைத்த மசாலா+
உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் சிறிது தண்ணீர் தெளித்து கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் பொரித்த பனீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

*சப்பாத்தி,நாண் இவற்றிற்க்கு தொட்டுக் கொள்ள நன்றாகயிருக்கும்.
Sending this recipe to Letz Relishh - Paneer Event by Jay.

Friday, August 20, 2010

தே.பொருட்கள்:
காராமணி - 1 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிது
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 1
காய்ந்த மிளகாய் - 3
உப்பு +எண்ணெய் =தேவைக்கு
 
செய்முறை :

*காராமனியை 6 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.

*அதனுடன் காய்ந்த மிளகாய்+சோம்பு+கிராம்பு+உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து வெங்காயம்+கொத்தமல்லிதழை+கறிவேப்பிலை சேர்த்து வடைகளாக சுட்டெடுக்கவும்.
Sending this recipe to CWS- Fennel seeds Event by Priya.

Thursday, August 19, 2010

தே.பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
மைதா மாவு - 1 கப்
கனிந்த வாழைப்பழம் - 2
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
பட்டர்(அறை வெப்பநிலை) - 3/4 கப்
பட்டைத்தூள் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
 
செய்முறை :

*கோதுமை மாவு+மைதா மாவு+உப்பு+பட்டைத்தூள்+பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*ஒரு பவுலில் வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்கு கலக்கவும்.சர்க்கரை கரைந்ததும் எசன்ஸ்+பிசைந்த வாழைப்பழம் சேர்த்து கலந்து மாவுகளை சிறிது சிறிதாக சேர்க்கவும்.

*மாவு கலவையை மஃபின் கப்பில் முக்கால் பாகம் வரை ஊற்றவும்.

*அவனை 180°C டிகிரிக்கு முற்சூடு செய்து 25 நிமிடம் வரை பேக் செய்து எடுக்கவும்.

Tuesday, August 17, 2010

தே.பொருட்கள்:

அரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
 
செய்முறை :

* அரிசியையும்,உளுந்தையும் தனித்தனியாக 3 மணிநேரம் ஊறவைத்து இட்லிக்கு அரைப்பதுபோல் மைய கெட்டியாக அரைக்கவும்.

*அதனுடன் தயிர்+சமையல் சோடா+உப்பு+எலுமிச்சைசாறு+மஞ்சள்தூள் கலந்து 4 மணிநேரம் புளிக்கவிடவும்.

*பின் அலுமினியம் டிரேயில் மாவை ஊற்றி இட்லிபாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*வெந்ததும் கட்செய்யவும்.அதன்மேல் மிளகாய்த்தூளை தூவிவிடவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து டோக்ளா மீது கொட்டி பறிமாறவும்.

Monday, August 16, 2010

தே.பொருட்கள்:
சுத்தம் செய்த மீன் துண்டுகள் - 10
சின்ன வெங்காயம் - 5
பூண்டுப்பல் - 4
தக்காளி - 1 சிறியது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளி கரைசல் - 1 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

வதக்கி அரைக்க:
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8
பூண்டுப்பல் - 5
தக்காளி - 1
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
 
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
 
செய்முறை:
*வெங்காயம்+பூண்டை இரண்டாக நறுக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி அத்துடன் குழம்பு மிளகாய்த்தூளை சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.

*புளிகரைசலுடன் அரைத்தவிழுது+உப்பு+மஞ்சள்தூள் கலந்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்+பூண்டு+தக்காளி சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்க்கவும்.

*வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்து மீன் வெந்ததும் குழம்பில் போட்டு இறக்கவும்.

*நல்லெண்ணெயை சூடு செய்து குழம்பில் ஊற்றி கலக்கவும்.

*சூப்பர் மணத்தோடு இருக்கும் இந்த குழம்பு..

Sunday, August 15, 2010

தே.பொருட்கள்:பனீர் - 250 கிராம்
வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
புதினா கொத்தமல்லி விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மூங்கில் குச்சிகள் - 6

செய்முறை:
* பனீரை சதுர துண்டங்களாக வெட்டி மிளகாய்த்தூள்+இஞ்சி பூண்டு விழுது+உப்பு+புதினா கொத்தமல்லி விழுது அனைத்தையும் கலந்து 1 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.

*மூங்கில் குச்சிகளை நீரில் 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*வெங்காயத்தை ஒவ்வொறு இதழாக பிரித்து பெரிய துண்டுகளாக வெட்டவும்.குடமிளகாயையும் பெரியதுண்டுகளாக வெட்டவும்.

*மூங்கில் குச்சியில் வெங்காயம்+குடமிளகாய்+பனீர் என மாற்றி மாற்றி சொருகவும்.

*270°C முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
sending this recipe to Letz Relishh -Paneer event by Jay.

Friday, August 13, 2010

பஜ்ஜி மாவில் நாம் சிறிது சோடா மாவு சேர்ப்போம்.அதற்கு பதில் இட்லி மாவு சேர்த்து செய்தால் க்ரிஸ்பியாக இருக்கும்.எண்ணெயும் அதிகம் குடிக்காது..

தே.பொருட்கள்:
வாழைக்காய் - 1 பெரியது
இட்லி மாவு - 1/4 கப்
கடலைமாவு - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*வாழைக்காயை மெலிதாக வட்டமாக நறுக்கவும் (விருப்பப்பட்டால் தோல் சீவிக்கொள்ளவும்).வாழைக்காயில் சிறிது உப்பு கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*பாத்திரத்தில்கடலைமாவு+இட்லிமாவு+அரிசிமாவு+கலர்+பெருங்காய்த்தூள்+ஓமம் (கையால் நன்கு தேய்த்து போடவும்)+உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து இட்லிமாவு பதத்திற்க்கு கலக்கவும்.

*எண்ணெய் காயவைத்து வாழைக்காயை மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

பி.கு:
*இட்லி மாவு+வாழைக்காயில் உப்பு இருப்பதால் மாவு கலக்கும் போது உப்பு சரி பார்த்து போடவும்.

*ஓமத்துக்கு பதில் சீரகம்+நசுக்கிய பூண்டுப்பல் சேர்க்கலாம்.

*வாழைக்காயில் உப்பு கலந்து வைப்பாதால் பஜ்ஜி சாப்பிடும் போது சப்பென்று இருக்காது.

Thursday, August 12, 2010

தே.பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
பூண்டுப்பல் - 2
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

*மிக்ஸியில் முதலில் பாசிப்பருப்பு+காய்ந்த மிளகாயையும் தண்ணீர்விடாமல் பவுடராக அரைத்து பின் தேங்காய்துறுவல்+புளி+உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர் சேர்த்து கெட்டியாக மைய அரைக்கவும்.

*கடைசியாக பூண்டுப்பல் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

Wednesday, August 11, 2010

இந்த பொடிமாஸ் கொஞ்சம் கூட கசப்பே தெரியாது..
தே.பொருட்கள்:
பாகற்காய் - 4
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் -1
பொடியாக அரிந்த தக்காளி -1
துருவிய தேங்காய் - 1/4 கப்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு

செய்முறை:
* பாகற்காயை விதை நீக்கி அரிந்து கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பொன்முறுகலாக வறுத்துக்கொள்ளவும்.

*கடலைப்பருப்பை 1மணிநேரம் ஊறவைத்து சோம்பு+காய்ந்த மிளகாய்+உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அரைத்த பருப்பை போட்டு உதிரியாக வரும்வரை கிளறவும்.

*பாகற்காயையும்,கடலைப்பருப்பையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+மஞ்சள்தூள்+உப்பு போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் பாகற்காய் கலவையை போட்டு நன்கு கிளறி தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.
Sending this recipe to CWS- Fennel seeds Event by Priya.

Monday, August 9, 2010

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
சுத்தம் செய்த புதினா - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டுப்பல் - 4
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் நெய்+எண்ணெய் விட்டு முந்திரியை வறுக்கவும்,பின் அரைத்த மசாலா சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

*வதங்கியதும் அரிசி+3 கப் நீர்+உப்பு சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து இறக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை வேறு பாத்திரத்தில் மாற்றி உடையாமல் கிளறி பரிமாறவும்.
Sending this recipe to CWS - Fennel seeds event by Priya.

Sunday, August 8, 2010

பனீர் 65

0

தே.பொருட்கள்:
பனீர் - 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
புட்கலர் - 1 சிட்டிகை
கடலை மாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*பனீரை சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெய் நீங்கலாக மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பிரிட்ஜில் 1 மணிநேரம் வைக்கவும்.

*பின் எண்ணெய் நன்கு காயவைத்து பொரித்தெடுக்கவும்.

Sending this recipe to Letz Relishh - Paneer Event by Jay.

தே.பொருட்கள்:
முளைகட்டிய பச்சைபயிறு - 1 கப்
முளைகட்டிய கறுப்பு கடலை - 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கரிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*முளைபயிறுகளுடன் உப்பு+சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக மீதமுள்ள பொருட்களை சேர்த்து பிசைந்து பகோடாகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Sending this recipe to Let's Sprout Event by Priya.

Friday, August 6, 2010

இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த (மாட்டி விட்ட) கவிசிவாவுக்கு மிக்க நன்றி!!!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
மேனகா.. சத்யா கணவர் பெயர்..

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
இதில் என்ன சந்தேகம்....

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

பாயிஜா அவர்களின் வலைப்பூவில் பின்னூட்டம் இடுவதற்காக வலைப்பதிவில் வலதுகால் வைத்தேன்.அப்போல்லாம் வலைப்பூ பற்றி எதுவும் தெரியாது.பின் ஹர்ஷினி அம்மா அவர்கள் தான் சொன்னாங்க வலைப்பூவில் நமக்கு தெரிந்ததை எழதலாம் என்று.அதிலிருந்து சமையல் குறிப்புகள் எழுத ஆரம்பித்தேன்...

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் இணைத்தேன்..அவ்வளவுதான்...

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

பெரும்பாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில்லை..மேலும் நான் எழுதுவது சமையல் ப்ளாக் அதனால் கூடவும் இருக்கலாம்...

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

அடப்போங்க ...சம்பாதிக்கிற மாதிரி இருந்திருந்தால் இந்நேரம் கோடீஸ்வரியாகிருப்பேன்...ம்ம் பொழுது போக்கிற்காகதான் எழுதுகிறேன்.அதில் பலர் பயனடைவதில் தனி சந்தோஷம்..

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ம்ம் ஒன்னுதாங்க..இதுவே சமாளிக்க முடியவில்லை.இதுல இன்னோன்னு வேறயா??

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

யார் மீதும் கோபம் வந்ததில்லை.மற்றவர்கள் மீது கோபப்பட நமக்கு என்ன உரிமை இருக்கு...கோபம் வந்ததால் தானே பொறாமைபட வாய்ப்பு வரும்..சோ யார் மீதும் எனக்கு கோபம்+ பொறாமை இல்லை.ஆரம்பத்தில் அதிகம் கோபம் வரும் இப்போல்லாம் போயே போச்சு...

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன்முதலில் பின்னூட்டம் இட்டவர் பாயிஷாவும் , சகோதரர் ஜமால் அவர்களும் தான்...

10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப் பற்றி பெருசா சொல்ல எதுவுமில்லை.நான் நானாகவே இருக்க விருப்பம்.இந்த பதிவுலகில் முகம் தெரியாத சகோதர சகோதரிகளை பெற்றுள்ளேன்.அதுவே எனக்கு பெரிய சந்தோஷம்.எல்லோரிடமும் அன்பா இருக்கனும்.பொறாமை பட கூடாது.பொறாமை வந்தால் நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது மாதிரி..முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யனும்..இன்னும் நிறைய இருக்கு.அதெல்லாம் சொன்னால் பதிவு பெருசாகிடும்...

இந்த தொடரை விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.....

Thursday, August 5, 2010

தே.பொருட்கள்:
நறுக்கிய தர்பூசணி வெள்ளை பகுதி - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம்,தக்காளி - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
 
செய்முறை :
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*குக்கரில் தர்பூசணி துண்டுகள்+கடலைப்பருப்பு+மஞ்சள்தூள்+வெங்காயம்+தக்காளி + 1 கப் நீர் சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.

*வெந்ததும் உப்பு+அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

*பின் தாளித்து கொட்டவும்.

Wednesday, August 4, 2010

தே.பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 5
தயிர் - 1 கப்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
 
செய்முறை :
*ப்ரெடின் ஓரங்களை நீக்கி,தண்ணிரில் நனைக்கவும்.

*பின் தண்ணீரை நன்கு பிழிந்து மிருதுவாக பிசைந்து வடைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*தயிரைக்கடைந்து உப்பு+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை சேர்த்து தாளித்து கொட்டவும்.

*பரிமாறும் போது ப்ரெட் வடைகளை தயிரில் கலந்தால் போதும்.

*சுவையான ஈசி ப்ரெட் வடை தயார்!!

Tuesday, August 3, 2010

தே.பொருட்கள்:
விருப்பமான காய்கறிகள் - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
பிரியாணி இலை - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டுப்பல் -4
பச்சை மிளகாய் - 3
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் -2
 
செய்முறை:
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.தேங்காயை துருவி 1 மற்றும் 2ஆம் பால் எடுக்கவும்.

*1ஆம் பால் 1 கப் அளவிலும்,2ஆம் பால் 1 1/2 கப ளவிலும் எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பிரியாணி இலையை போட்டு தாளித்து வெங்காயம்+அரைத்த மசாலா+தக்காளி+தனியாத்தூள்+உப்பு+காய்கறிகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்றாக வதங்கியதும் 2ஆம் பாலை ஊற்றி காய்களை வேகவிடவும்.காய்கள் நன்கு வெந்ததும் 1ஆம் பாலை ஊற்றி இறக்கவும்.

பி.கு
நான் சேர்த்திருக்கும் காய்கள் கேரட்+பீன்ஸ்+பட்டாணி+உருளைகிழங்கு.
தே.பொருட்கள்:
சோயா உருண்டைகள் - 10
பச்சரிசி - 1 கப்
பாசிபருப்பு - 1/4 கப்
முளைகட்டிய வெந்தயம் - 1/2 டேபிள்ஸ்பூன்
அரிந்த வெங்காயம் - 1 சிறியது
அரிந்த தக்காளி - 1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
ஸ்வீட் கார்ன் - 1 கைப்பிடி
பொடியாக அரிந்த புதினா இலைகள்- 5
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*அரிசி+பாசிபருப்பை கழுவி வைக்கவும்.சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு குளிர்ந்த நீரில் 2 அ 3 முறை அலசி பிழிந்து மிக்சியில் ரைத்தால் சோயா கீமா ரெடி.

*குக்கரில் எண்ணெய் ஊற்றி கரம்மசாலாவை போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+புதினா+தக்காளி+மிளகாய்த்தூள்+சோயா கீமா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் முளைக்கட்டிய வெந்தயம்+அரிசி+ஸ்வீட் கார்ன்+பருப்பு+உப்பு+3 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை நன்கு குழைய வேகவைத்து இறக்கவும்.

*பருப்புத்துவையல்,மசால் வடையுடன் சாப்பிட சூப்பர்ர்ர்...
Sending this recipe to Let's Sprout by Priya & Iftar Moments Hijri 1431 by Ayeesha.

Monday, August 2, 2010

விருதுகள்

0
விருது கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி!!
தோழி பாயிஷா கொடுத்த விருது!!


தோழி ஆயிஷா கொடுத்த விருது
தோழி ஆனந்தி கொடுத்த விருது
சகோதரர் மாணிக்கம் கொடுத்த விருது!!
சகோதரர் ஜெய்லானி கொடுத்த விருது!!
இவ்விருதுகளை ஸாதிகாக்கா,கவிசிவா,லாவண்யா, கிருஷ்ணவேணி,நிலோபர்,ஜெய் , ஆயிஷா, புவனேஸ்வரி இவர்களுக்கு கொடுக்கிறேன்...