Friday, August 13, 2010

வாழைக்காய் பஜ்ஜி

பஜ்ஜி மாவில் நாம் சிறிது சோடா மாவு சேர்ப்போம்.அதற்கு பதில் இட்லி மாவு சேர்த்து செய்தால் க்ரிஸ்பியாக இருக்கும்.எண்ணெயும் அதிகம் குடிக்காது..

தே.பொருட்கள்:
வாழைக்காய் - 1 பெரியது
இட்லி மாவு - 1/4 கப்
கடலைமாவு - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*வாழைக்காயை மெலிதாக வட்டமாக நறுக்கவும் (விருப்பப்பட்டால் தோல் சீவிக்கொள்ளவும்).வாழைக்காயில் சிறிது உப்பு கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*பாத்திரத்தில்கடலைமாவு+இட்லிமாவு+அரிசிமாவு+கலர்+பெருங்காய்த்தூள்+ஓமம் (கையால் நன்கு தேய்த்து போடவும்)+உப்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து இட்லிமாவு பதத்திற்க்கு கலக்கவும்.

*எண்ணெய் காயவைத்து வாழைக்காயை மாவில் தோய்த்து பொரித்தெடுக்கவும்.

பி.கு:
*இட்லி மாவு+வாழைக்காயில் உப்பு இருப்பதால் மாவு கலக்கும் போது உப்பு சரி பார்த்து போடவும்.

*ஓமத்துக்கு பதில் சீரகம்+நசுக்கிய பூண்டுப்பல் சேர்க்கலாம்.

*வாழைக்காயில் உப்பு கலந்து வைப்பாதால் பஜ்ஜி சாப்பிடும் போது சப்பென்று இருக்காது.

0 comments:

Post a Comment