Monday, August 2, 2010

சோயா - காளான் புலாவ்

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
சோயா உருண்டைகள் - 10
அரிந்த காளான் - 1/2 கப்
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்பால் - 2 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2

செய்முறை :
*சோயாவை கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு குளிர்ந்த நீரில் 3முறை நன்கு அலசி பிழிந்துக்கொள்ளவும்.

*குக்கரில் பட்டர்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+காளான்+உப்பு+சோயா உருண்டைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் அரிசி+தேங்காய்ப்பால்+1 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து இறக்கவும்.

*ராய்த்தா அல்லது வறுவலுடன் பரிமாறவும்.

0 comments:

Post a Comment