![]() |
ரவா லட்டு செய்யும் போது பால் பவுடர் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று ஒரு புக்கில் படித்தேன்.அதன் படி செய்ததில் நன்றாக இருந்தது.
தே.பொருட்கள்
ரவை - 1 கப்
பால் பவுடர் - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 3
நெய் - 1/2 கப்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
செய்முறை
* ரவையை லேசாக வெறும் கடாயில் வறுக்கவும்.
*சர்க்கரை+ஏலக்காய் இவ்விரண்டையும் நைசாக பொடிக்கவும்.ரவையையும் இவற்றையும் நைசாக பொடிக்கவும்.
*இவற்றுடன் பால் பவுடர்+வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்றாக கலக்கவும்.
*நெய்யை லேசாக சூடு செய்து ரவை கலவையில் ஊற்றி கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்.

1 comments:
This is my Blog post...This website had copied the entire content of this recipe...u copied all my recipes..pls give credit to original post otherwise remove it....
Post a Comment