Thursday, January 30, 2014


தே.பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
துருவிய கேரட் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பட்டாணியை நீரில் வேகவைத்து கையால் ஒன்றிரண்டாக மசிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+உப்பு சேர்த்து வதக்கவும்.

*பின் மசித்த பட்டாணியை சேர்த்து நன்கு பொலபொலவென வரும் வரை வதக்கி கேரட் துருவலை சேர்த்து இறக்கவும்.

பி.கு:

*காய்ந்த பட்டாணியாக இருந்தால் முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.விரும்பினால் தேங்காய்த் துருவலும் சேர்க்கலாம்.

Recipe Source : Kitchen Secrets
தே.பொருட்கள்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/8 டீஸ்பூன்
நீர் - 1 கப் + 1/4 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய்த்துறுவல் - 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 8
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*அரிசிமாவை வெறும் கடாயில் லேசாக வறுக்கவும்.

*1 கப் நீரில் மஞ்சள்தூள் + உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து வறுத்த மாவில் கொஞ்சகொஞ்சமாக தெளித்து கட்டியில்லாமல் உதிரியாக பிசையவும்.

*மாவை கையால் எடுத்தால் உருண்டை பிடிக்க வரவேண்டும்,அழுத்தினால் பொலபொலவென கொட்டவேண்டும்.அதுவே சரியான பதம்.

*அதனை ஆவியில் 30-45 நிமிடங்கள் வேகவைத்து ஆறவைக்கவும்.

*வெல்லத்தை 1/4 கப் நீரில் சூடு செய்து,கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவைக்கவும்.

*பாகை நீரில் விட்டால் உருண்டை எடுக்கும் பதத்தில் வரவேண்டும்.

*அந்த பதத்தில் பாகை மாவில் கொட்டி கிளறி 5 நிமிடங்கள் வைக்கவும்.

*முந்திரியை நெய்யில் வறுத்து புட்டு மாவில் சேர்த்து அதனுடன் தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

Tuesday, January 7, 2014

தே.பொருட்கள்

பாகம் - 1

மைதா - 4 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
ப்ரெஷ் ப்ளுபெர்ரி - 8 பழங்கள் +1/4 டீஸ்பூன் மைதா

பாகம் -2

பால் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்
ஆப்பிள் விழுது - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*ப்ளுபெர்ரியில் 1/4 டீஸ்பூன் மைதா கலந்து வைக்கவும்.

*பாகம் -2 கொடுக்கபட்டதை ஒன்றாக கலந்து பாகம் -1ல் கொடுத்ததை இதில் மெதுவாக கலக்கவும்.

*கடைசியாக ப்ளுபெர்ரி பழத்தை கலந்து மக்கில் ஊற்றி மைக்ரோவேவில் 2- 21/2 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.