Thursday, January 30, 2014

பட்டாணி பொடிமாஸ்


தே.பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
துருவிய கேரட் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பட்டாணியை நீரில் வேகவைத்து கையால் ஒன்றிரண்டாக மசிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+உப்பு சேர்த்து வதக்கவும்.

*பின் மசித்த பட்டாணியை சேர்த்து நன்கு பொலபொலவென வரும் வரை வதக்கி கேரட் துருவலை சேர்த்து இறக்கவும்.

பி.கு:

*காய்ந்த பட்டாணியாக இருந்தால் முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.விரும்பினால் தேங்காய்த் துருவலும் சேர்க்கலாம்.

0 comments:

Post a Comment