Sunday, December 22, 2013

 ப்ரெட் கட்லட் செய்ய தே.பொருட்கள்

ப்ரெட் ஸ்லைஸ் -8 (ஓரங்கள் நீக்கியது)
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
நசுக்கிய இஞ்சி பூண்டு -1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+இஞ்சி பூண்டு  சேர்த்து வதக்கி கரம் மசாலா+உருளை+கொத்தமல்லித்தை+உப்பு+ஆம்சூர் பொடி சேர்த்து இறக்கவும்.

*ஆறியதும் நடுத்தர உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
 *ப்ரெட்டை தண்ணீரில் நனைத்து நீரை நன்கு பிழிந்து ஒருளைக்கலவையை வைத்து நன்கு உருட்டவும்.
 *தவாவில் எண்ணெய் விட்டு 2பக்கமும் வேகவைத்து எடுக்கவும்(அல்லது) எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சாண்ட்விச் செய்ய

French Baguette- 1/2
லெட்டூஸ் இலைகள் - 2
வட்டமாக நறுக்கிய தக்காளி - 3
சாலட் சாஸ் -தேவைக்கு
ப்ரெட் கட்லட் - தேவைக்கு

செய்முறை
*   Baguette    2 ஆக கீறி சாலட் சாஸை ஊற்றி லேசாக தடவி லெட்டூஸ் இலைகள்+தக்காளி+கட்லட் வைத்து பரிமாறவும்.

Monday, October 14, 2013

தே.பொருட்கள்

பொடித்த ஒட்ஸ்,பார்லி மாவு - தலா 1/4 கப்
கோதுமை மாவு,ராகி,சோயா மாவு - தலா 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு தலா - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*கொடுத்துள்ள அனைத்து மாவுகளைகளையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து சிறிது நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசையவும்.

*அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*பின் தேங்காய்த்துறுவல்+தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சுண்டலில் சேர்க்கவும்.

Wednesday, February 20, 2013

இது என்னுடைய 700 வது பதிவு!! ....

தே.பொருட்கள்

ப்ரெட் ஸ்லைஸ் - 5
பால் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நீர் - 1 கப்
ஏலக்காய்த்தூள் + ரோஸ் எசன்ஸ் - தலா 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி பாலில் நனைத்து நன்கு பிழியவும்.

*இதனை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.

*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை +நீர் சேர்த்து பிசுபிசுப்பு பதத்தில் காய்ச்சி எடுக்கவும்.

இதில் நெய் +ஏலக்காய்த்தூள்+ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும்.

*உருண்டைகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து சூடான் சர்க்கரை பாகில் ஊறவிடவும்.

*2-3 மணிநேரத்தில் பரிமாறவும்.


Monday, February 18, 2013

 தே.பொருட்கள்
வெங்காயம் - பாதி
தக்காளி - 1 பெரியது
கத்திரிக்காய் - 1 பெரியது
புளிகரைசல் - 1/4 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

*வெங்காயம்+தக்காளி+கத்திரிக்காய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
 *குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+கத்திரிக்காய் சேர்த்து வதக்கி முழ்குமள்வு நீர் விட்டு 3விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*பின் நன்கு மசிக்கவும்.
 *அதனுடன் உப்பு+புளிகரைசல்+சாம்பார் பொடி சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவைத்து இறக்கவும்.
பி.கு
*கொத்சு தண்ணியாக இருந்தால் கொதிக்கும் போது 1 குழிக்கரண்டி இட்லிமாவை கரைத்து கொதிக்கவைத்து இறக்கவும்.

Thursday, February 14, 2013

தே.பொருட்கள்

சிக்கன் உருண்டைக்கு

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
பொட்டுக்கடலை மாவு - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
பொடியாக நருக்கிய பச்சை மிளகாய் -1
இஞ்சிபூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா - 1 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்+பொரிக்க தேவையானளவு

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளவும்.

*கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் +பச்சை மிளகாய்+புதினா சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

*ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்க+வதக்கிய வெங்காய கலவை+மேற்கூறிய அனைத்து பொருட்களில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் பொன்னிறமக பொரித்தெடுக்கவும்.
கிரெவிக்கு

பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
பொடியாக நறுக்கிய தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா,கொத்தமல்லி - தலா 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
கசகசா-1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிக்க

பட்டை - 1சிறுதுண்டு
பிரியாணி இலை -2
கிராம்பு -3
ஏலக்காய் -1

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சிப்பூண்டு +தக்காளி சேர்த்து வதக்கவும்.
*பின் தூள் வகைகள்+உப்பு+புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கி தேவையானளவு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*கொதித்ததும் தேங்காய் விழுதை சேர்த்து மேலும் கொதிக்க வைத்து உருண்டைகளை சேர்த்து இறக்கவும்.

Monday, February 11, 2013

அக்காவிடம் கற்றுக் கொண்ட குறிப்பு...

தே.பொருட்கள்
பாகற்காய் -1 நடுத்தர அளவு
மிளகாய்த்தூள்+எலுமிச்சை சாறு  -தலா 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் + தக்காளி - 1 சிறியது
உப்பு- தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*பாகற்காயை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடம் வைத்திருந்து நன்கு கழுவவும்.

*மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து  கலந்து,நான் ஸ்டிக் கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெயில் மொறுகலாக சிறுதீயில் வறுத்தெடுக்கவும்.

*பின்  வறுத்த பாகற்காய் + வெங்காயம்+தக்காளி +எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

பி.கு
*இந்த சாலட் கொஞ்சம்கூட கசப்பு தெரியாது.

*நான் ஸ்டிக் கடாயில் வறுப்பதால் எண்ணெய் குறைவாக சேர்க்கலாம்.

Thursday, February 7, 2013

சம்பல் /Sambal

0

வானதியின் குறிப்பை பார்த்து செய்தது.தோசை,கோதுமை தோசைக்கு நன்றாக இருக்கும்.நன்றி வானதி!!

தே.பொருட்கள்

தேங்காய்த்துறுவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
சின்ன வெங்காயம் -6
கறிவேப்பிலை - 1 கொத்து
சீரகம்+எண்ணெய் - தலா 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*காய்ந்த மிளகாயை எண்ணெயில் கருகாமல் வறுத்தெடுக்கவும்.

*சிறிய இடிப்பானில் காய்ந்த மிளகாயுடன் உப்பு சேர்த்து இடிக்கவும்பின் சீரகம்+சின்ன வெங்காயம்+கறிவேப்பிலை சேர்த்து இடிக்கவும்.

*கடைசியாக தேங்காய்த்துறுவல் சேர்த்து இடிக்கவும்.தண்ணீர் சேர்க்ககூடாது.

பி.கு

*கறிவேப்பிலை+சின்ன வெங்காயம் சேர்ப்பதுதான் சுவை தரும்.

*துவையல் போல் அரைக்கவேண்டுமெனில் மிக்ஸியில் தேங்காய்துறுவல்+பச்சை மிளகாய்+உப்பு+புளி +சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கடைசியாக சின்ன வெங்காயம்+கறிவேப்பிலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

Wednesday, February 6, 2013

தே.பொருட்கள்
கோதுமைமாவு - 2கப்
அவகோடா - 1
ஓமம்,கரம்மசாலா - தலா1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*அவகோடாவின் சதைப்பகுதியை எடுத்து  நன்கு மசிக்கவும்.

*கோதுமைமாவில் கொடுத்துள்ள அனைத்து பொருளையும் ஒன்றாக கலந்து பிசையவும்.

*தண்ணீர் சேர்த்து பிசையதேவையில்லை.சிறிது நேரம் கழித்து சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்.

*இந்த சப்பாத்தியை சுடும் போது எண்ணெயும் சேர்க்கதேவையில்லை.

Monday, February 4, 2013

தே.பொருட்கள்

பால் - 3 கப்
பாதாம்பருப்பு - 10
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை -  3 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது
சாரைப்பருப்பு + பிஸ்தாபருப்பு - அலங்கரிக்க

செய்முறை

*பாதாம்பருப்பை ஊறவைத்து  தோல்நீக்கி நைசாக அரைத்துக் கொள்ளவும்.

*பாலில் பட்டை+கிராம்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டவும்.

*வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து கரைய விடவும்.

*வடிகட்டி பாலில் அரைத்த பாதாம் விழுதை சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.

*பின் சர்க்கரை+ஏலக்காய்த்தூள் +குங்குமப்பூ சேர்த்து சர்க்கரை கரைந்ததும் இற்க்கவும்.

*பரிமாறும் போது பிஸ்தாபருப்பு+சாரைப்பருப்பு சேர்த்து பருகவும்.

Wednesday, January 30, 2013

தே.பொருட்கள்

புளி கரைசல் - 2 கப்
தக்காளி -1
மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் -தலா 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் வறுத்துப் பொடிக்க

மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

தாளிக்க
கடுகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
நெய் - 1 டீஸ்பூன்



செய்முறை
*எண்ணெயில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.

*புளிகரைசல்+தக்காளி+உப்பு+மஞ்சள்தூள்+பெருங்காயத்தூள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலந்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் பொடித்த பொடியை தூவி 5 நிமிடம் கழித்து நுரை வரும்போது இறக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

Tuesday, January 29, 2013



நார்மலாக மரவள்ளிக்கிழங்கில் தோசைபுட்டு, வடை, பொரியல் என செய்வோம்.கீதாவிடம் பேசியபோது மரவள்ளிகிழங்கில் புது ரெசிபி சொல்லுங்க என கேட்டபோது அதில் சூப் செய்தால் நன்றாக இருக்கும் என சொன்னாங்க.அதன்படி செய்ததில் ரொம்ப சூப்பரா இருந்தது.

தே.பொருட்கள்

மரவள்ளிகிழங்கு - 1 நடுத்தர அளவு
பால் - 4 கப்
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*கிழங்கை கழுவி குக்கரில் 2 விசில் வரை வேகவைத்து தோலெடுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் பாலை கொதிக்கவைத்து வெண்ணெய்+உப்பு+அரைத்த கிழங்கு சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.

*கொஞ்சம் கெட்டியான பதத்தில் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

*இந்த சூப் மிக சுவையாக இருக்கும்.

பி.கு

*நான் கிழங்கினை என் விருப்பத்திற்கேற்ப கொரகொரப்பாக அரைத்தேன்,அவரவர் விருப்பப்படி நைசாக அரைத்தும் சேர்க்கலாம்.




Monday, January 28, 2013


பாகற்காயில்  விட்டமின் பி1,பி2,பி3  மற்றும் விட்டமின் சி,மாக்னீசம்,போலிக் ஆசிட்,இரும்புசத்து  என நிறைய விட்டமின்கள் இருக்கு..இது மிகவும் குறைந்த கலோரி மற்றும் அதிகளவு நார்சத்து கொண்ட காய்.

இது ப்ரோக்கலியை விட இருமடங்கு பீடா கரோட்டின்      கொண்டது. ஸ்பீனாச்சைவிட இருமடங்கு  கால்சியம் சத்துக் கொண்டது.வாழைப்பழத்தை விட இருமடங்கு பொட்டசியம் நிறைந்தது.

தே.பொருட்கள்

பாகற்காய் -1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+மிளகுத்தூள்  -தலா 1/4 டீஸ்பூன்

செய்முறை

*பாகற்காயை விதை நீக்கி அரிந்து 3/4 நீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

*அதனுடன் எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து கலக்கி மிளகுத்தூள் மேலூ தூவி பருகவும்.

பி.கு

*பாகற்காயின் கசப்பிற்கேற்ப எலுமிச்சை சாறை சேர்த்து குடித்தால் கசப்பு தெரியாது.

Thursday, January 24, 2013

மெயிலில் சிலபேர் கேட்டதால் அவர்களுக்காக இந்த பதிவு....மாவிளக்கு போட்டு அம்மனை வழிபடுவது நலம்..செய்தால் நான் மட்டும் சாப்பிடவேண்டும் என்பதால் கொஞ்சமாகதான் செய்வேன்.மாவிளக்கு உடன் தேங்காய்ப்பல் சேர்த்து சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும்.

தே.பொருட்கள்

பச்சரிசி - 1/4 கப்
துருவிய வெல்லம் - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி துணியில் உலர்த்தவும்.

*உலர்ந்ததும் நைசாக   பொடிக்கவும்

*அதனுடன் வெல்லம் சேர்த்து பிசையவும்.அரிசியின் ஈரபதத்திலயே    வெல்லம் பிசைய ஈசியாக இருக்கும்.

*உருண்டையாக பிடித்து நடுவில் குழிபோல் செய்து நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி படைக்கவும்.

பி.கு

அரிசி+வெல்லம் சேர்த்து பிசையும் போட்டு தண்ணீர் தெளித்து பிசையக்கூடாது.

Tuesday, January 22, 2013

தே.பொருட்கள்:

தோசை - 4
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -1
இட்லிபொடி - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :

*தோசையை ப்ரிட்ஜில் 3 மணிநேரம் வைத்து எடுத்து நன்கு  உதிர்த்துக்கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய்+நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+வெங்காயம்+பச்சை மிளகாய் +உப்பு+சர்க்கரை என ஒன்றன் பின் ஒன்றாக  சேர்த்து வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் உதிர்த்த இட்லி சேர்த்து கிளறி இட்லிப்பொடி தூவி கிளறி எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

*இனிப்பு+புளிப்பு+காரம் நிறைந்த சுவையில் இருக்கும் இந்த உப்புமா.

பி.கு

*இந்த உப்புமா செய்வதற்கு இட்லி / தோசையை ப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் உதிர்க்க சுலபமாக இருக்கும்.

Monday, January 21, 2013



தே.பொருட்கள்:
பாஸ்மதி - 2 கப்
வெந்தயக்கீரை - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
பூண்டுப்பல் - 4
இஞ்சி - சிறுதுண்டு
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 3

தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
 
செய்முறை:
*கீரையை சுத்தம் செய்து நன்கு அலசி வைக்கவும்.

*குக்கரில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+அரைத்த விழுது+மஞ்சள்தூள்+வெந்தயக்கீரை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.


*பின் மஞ்சள்தூள்+உப்பு+1 கப் நீர்+2 கப் தேங்காய்ப்பால் சேர்த்து 3 விசில் வரை வேக வைத்து எடுக்கவும்.


*ப்ரெஷர் அடங்கியதும் வேறொரு பாத்திரத்தில் மாற்றி அப்பளம் அல்லது வறுவலுடன் பரிமாறவும்.

Wednesday, January 16, 2013

ஏற்கனவே இட்லி சாம்பார் காய்கள் சேர்த்து நான் செய்வதுண்டு.இந்த முறை ஹோட்டலில் செய்வதுபோல் செய்தேன்.

தே.பொருட்கள்

துவரம்பருப்பு - 2/3 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் -2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயப்பொடி -1/4 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு+ உளுத்தம்பருப்பு+சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 1

செய்முறை

*துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.அரைகக் கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி+தக்காளி+பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

*பின் அரைத்த விழுது +உப்பு+1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி சேர்க்கவும்.


*இந்த சாம்பார் இட்லி,தோசை,சப்பாத்தி,வெண்பொங்கல்,ஊத்தாப்பம் என  அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.

பி.கு

*சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

*சாம்பார் இன்னும் வாசனையாக இருக்க தாளிப்பில் சீரகத்தை மறக்காமல் சேர்க்கவும்.  நான் சேர்க்க மறந்துவிட்டேன்.

*2/3 கப் = 10 டேபிள்ஸ்பூன்+ 2 டீஸ்பூன்

*இதில் விரும்பி்னால் முருங்கைக்காய்,கத்திரிக்காய் சேர்த்து செய்யலாம்.

Thursday, January 10, 2013

நீண்ட நாட்களாக சைவ ஒட்டல்களில் உணவு பரிமாறுவதுப்போல் செய்ய வேண்டும் என்று ஆசை.கடைசியாக கிறிஸ்துமஸ் முதல்நாளன்று செய்தேன்.

இடமிருந்து வலமாக  

ஆரஞ்சுப்பழ கேசரி, கத்திரிக்காய் சாம்பார்,தக்காளி ரசம்,தயிர், உருளை வறுவல், பச்சைப் பட்டாணி கோஸ் பொரியல்,கேரட் பீன்ஸ் பொரியல்,அப்பளம்,மோர் மிளகாய் மற்றும் சாதம்..

பச்சைப் பட்டாணி கோஸ் பொரியல்

தே.பொருட்கள்

பச்சைப் பட்டாணி - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கோஸ் -1 கப்
நறுக்கிய வெங்காயம் -1
கீறிய பச்சை மிளகாய் -2
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*பச்சை பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும். அந்த நீரை கீழே ஊற்றவேண்டாம்

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+கோஸ்+உப்பு என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி பட்டாணி வேகவைத்த நீரை ஊற்றி வேகவிடவும்.

*கோஸ் வெந்ததும் வேகவைத்த பட்டாணி+தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு
*இதற்கு ப்ரோசன் பட்டாணி மற்றும் ப்ரெஷ் பட்டாணியை விட காய்ந்த பட்டாணியை ஊறவைத்து செய்தால்தான் நன்றாக இருக்கும்.

*இதே போல் கோஸ் பதிலாக பீட்ரூட்டிலும் செய்யலாம்.


Monday, January 7, 2013

Recipe Source: Julia Child

கொடுத்துள்ள அளவில் நான் பாதி அளவில்  சேர்த்து செய்துள்ளேன்.இந்த அளவில் 6 க்ரோசண்ட் வரும்.

தே.பொருட்கள்

ஈஸ்ட் கலவை

டிரை ஈஸ்ட் -1/2 டீஸ்பூன்
உப்பு - 1/8 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 டேபிள்ஸ்பூன்
வெதுப்வெதுப்பான நீர் - 1/8 கப் (100°F/38°C)

வெதுப்பான நீரில் மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

க்ரோசண்ட் கலவைக்கு

மைதா மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
பால் - 1/3 கப்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் -1/4 கப் (= 60 கிராம் /Half Stick = 1/8 lb)
முட்டை - 1 / பால் -மேலே தடவ

செய்முறை

*பாலில் உப்பு+சர்க்கரை+எண்ணெய்+பொங்கிய ஈஸ்ட் கலவை இவறை ஒன்றாக கலந்து மாவில் சேர்த்து பிசையவும்.

*இந்த அளவே மாவு பிசைவதற்கு சரியாக இருக்கும்.தேவையானால் மட்டும் நீர் சேர்த்து பிசையவும்.

*மிருதுவாக 10 நிமிடங்கள் பிசையவும்.
*ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.

*2 மணிநேரம் கழித்து இருமடங்காக உப்பியிருக்கும் மாவை பிசைந்து மீண்டும் வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைத்து எடுக்கவும்.
*வெண்ணெயை அறைவெப்பநிலையில் வைத்து நன்றாக பிசையவும்.
*உப்பியிருக்கும் மாவை Rectangle வடிவில்  உருட்டில் மேல்பாகத்தில் வெண்ணெயை வைக்கவும்.

*வெண்ணெய் தடவாத பகுதியை உள்பக்கமாகவும்,தடவிய பக்கத்தை மேல்பக்கமாகவும் மடிக்கவும்.
*இவற்றை க்ளியர் ராப் கவரில் மடித்து ப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைக்கவும்.
*ப்ரிட்ஜிலிருந்து எடுத்து வடிவில் வெண்ணெய் கலவை வெளியவராதபடி உருட்டி இப்பொழுது மடிப்பு பக்கத்தை மாற்றி முன்பு கூரியதை போலவே அல்லது படத்தில் காட்டியள்ளதுபோல் மடிக்கவும்.

*இது போல் 3 அல்லது 4 முறை செய்யவும்.ஒவ்வொரு மடிப்புக்கு பிறகும் க்ளியர் ராப் கவரில் சுற்றி 1/2 மணிநேரத்துக்கொருமுறை செய்யவும்.

*மீண்டும் Rectangle வடிவில் உருட்டி 3 பாகமாக வெட்டி ஒரு பாகத்தை உபயோகபடுத்தவும்,மற்ற இரண்டியும் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*வெட்டிய பக்கத்தை ஒன்றை Square வடிவில் உருட்டி Diagonale ஆக வெட்டவும்.
*வெட்டியதில் ஒன்றை எடுத்து அடியிலிருது உருட்டினால் படத்தில் உள்ளது போல் வரும்.

*இதுபோல் அனைத்தையும் செய்து பேக்கிங் டிரேயில் இடைவெளி வைத்து அடுக்கி 2மடங்காக உப்பும்வரை வைக்கவும்.

*உப்பியதும் பால்/முட்டையில் சிறிது நீர் கலந்து ப்ரெஷ்ஷால் க்ரோசண்ட் மேல் தடவவும்.
*240 °C முற்சூடு செய்த அவனில் 10-12 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

பி.கு

*இதனை செய்ய எனக்கு 2 நாளானது.

*முதல்நாள் வெண்ணெய் கலவையை மாவில் வைத்து மடித்ததும் ஒர் இரவு முழுவதும் ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் மீதியுள்ள ஸ்டெப்படி செய்தேன்.

* எத்தனை முறை மடிக்கிறமோ அத்தனை லேயர்கள் வரும்.நான் 5-6 தடவை மடித்து செய்தேன்.அதனால் அதிக அளவில் லேயருடன் மிருதுவாக இருந்தது.