Friday, October 28, 2011

 தே.பொருட்கள்
வேப்பம்பூ - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துறுவல் - 1/4 கப்
கா.மிளகாய் - 2
புளி - சிறிய நெல்லிக்காயளவு
பெருங்காயம் - சிறுதுண்டு
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
*உளுத்தம்பருப்பு+தேங்கய்த்துறுவல் இவைகளை தனித்தனியாக வெறும் கடாயில் வறுக்கவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயம்+காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி வேப்பம்பூவை சேர்த்து கருகாமல் வதக்கி எடுக்கவும்.

*ஆறியதும் முதலில் மிக்ஸியில் உளுத்தம்பருப்பை பொடி செய்து பின் மற்ற பொருட்களை உப்பு சேர்த்து நைசாக கெட்டியாக நீர் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

*கொஞ்சம்கூட கசப்பே தெரியாது இந்த துவையல்.

*வேப்பம்பூ கருகிவிட்டால் துவையல் கசக்கும்.

Sunday, October 23, 2011

தே.பொருட்கள்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மைதா பிஸ்கட் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் பொரிக்க
அவல் - 1 கைப்பிடி
பொட்டுக்கடலை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கொத்து
முந்திரி - தேவைக்கு
வேர்க்கடலை - 1 கைப்பிடி

மைதா பிஸ்கட் செய்யும் முறை

மைதா+சர்க்கரை -தலா 1/4 கப்
வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை

*அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையானளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசையவும்.

*பின் உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் செய்து கட் செய்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*அல்லது 180°C முற்சூடு செய்த அவனில் பேக் செய்து எடுக்கலாம்.

செய்முறை

*எண்ணெயில் பொரிக்க கொடுத்துள்ளவைகளை தனித்தனியாக பொரித்துக் கொள்ளவும்.

*ஜிப்லாக் கவர் அல்லது ஒரு டப்பாவில் அனைத்து பொருட்களுடன் சிறிது உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பி.கு
பூந்தி செய்யும் போது மாவை 2  பங்காக பிரிது ஆரஞ்சு மற்றும் பச்சை கலர் சேர்த்து செய்தால் மிக்ஸர் பார்க்க அழகா இருக்கும்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Wednesday, October 19, 2011

தே.பொருட்கள்:
கடலைமாவு - 1 கப்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை,முந்திரி - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் கடலைமாவு+உப்பு+கலர்+பேக்கிங் சோடா+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையான நீர் விட்டு கரைக்கவும்.


*பூந்தியாக விழும் பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.


*எண்ணெய் காயவைத்து பூந்தி அல்லது கண்கரண்டியில் மாவை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி பொரித்தெடுக்கவும்.


*கறிவேப்பிலை+முந்திரியை தனித்தனியாக எண்ணெயில் வறுத்து பூந்தியில் கலந்து பரிமாறவும்.

பி.கு
விரும்பினால் பூண்டை நசுக்கியும்,வேர்க்கடலையும் எண்ணெயில் வறுத்து சேர்க்கலாம்.

Monday, October 17, 2011

தே.பொருட்கள்
வெங்காயம் - 1
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 1 சிறுதுண்டு
உப்பு + எண்ணெய் - தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*வெங்காயம்+தக்காளியை துண்டுகளாகவும்.

*உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுக்கவும்.பின் எண்ணெயில் காய்ந்த மிளகாய்+வெங்காயம்+தக்காளியை வதக்கி ஆறவிடவும்.

*முதலில் உளுத்தம்பருப்பை பவுடராக்கிவிட்டு வதக்கிய பொருட்களுடன் உப்பு+தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சேர்க்கவும்.


Wednesday, October 12, 2011

தே.பொருட்கள்
உதிராக வடித்த சாதம் - 2 கப்
துருவிய மாங்காய் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வேகவைத்த கறுப்புக் கடலை - 1/2 கப்
பொடியாக நருக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நருக்கிய இஞ்சி - சிறுதுண்டு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு -1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+பச்சை மிளகாய்+இஞ்சி+மாங்காய் சேர்த்து வதக்கவும்.

*பின் சாதம்+கடலை+உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்.

Monday, October 10, 2011

தே.பொருட்கள்

சௌசௌ - 1
பால் - 1 கப்
கன்ஸ்டண்ட் மில்க் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
பச்சை கலர் - 1 சிட்டிகை விரும்பினால்

செய்முறை

*சௌசௌ தோல் சீவி துண்டுகளாகி நைசாக அரைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் நெய்யில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் பாலை சேர்த்து வேகவிடவும்.

*கொஞ்சம்  கெட்டியான பதம் வந்ததும் கன்ஸ்டண்ட் மில்க்+கலர்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*மீதமுள்ள நெய்யில் முந்திரி,திராட்சை வதக்கி பாயாசத்தில் சேர்க்கவும்.

*இந்த பாயாசம் வித்தியாசமான சுவையில் இருக்கும். 

Wednesday, October 5, 2011

காஞ்சிபுரம் இட்லி செய்ய தே.பொருட்கள்

பச்சரிசி - 1 1/2 கப்
புழுங்கலரிசி - 1 1/2 கப்
உளுந்து - 1 கப்
உப்பு - தேவைக்கு
சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்

தாளிக்க

நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கரகரப்பாக பொடித்த மிளகு சீரகம் - தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
முந்திரி - விரும்பினால்

 செய்முறை
*இட்லி செய்ய கொடுத்துள்ள பொருட்களை உப்பு+சுக்குப்பொடி தவிர அரிசி+உளுந்து தனித்தனியாக ஊறவைத்து அரைத்து உப்பு+சுக்குப்பொடி சேர்த்து புளிக்கவைக்கவும்.

*மாவு புளித்ததும் நெய்யில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப்போட்டு தாளித்து சேர்க்கவும்.நல்லெண்ணெயும் ஊற்றி மாவை நன்கு கலக்கவும்.
*இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

சட்னி செய்ய தே.பொருட்கள்

தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
புளி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 1
பூண்டுப்பல் - 1
உப்பு - தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை,பெருங்காயம் - சிறிது

செய்முறை
*அனைத்தையும் ஒன்றாக அரைத்து தாளித்து சேர்க்கவும்.

Sunday, October 2, 2011


தே.பொருட்கள்
புளி கரைசல் -2 கப்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 20
சின்ன வெங்காயம் - 10
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு

அரைக்க
சின்ன வெங்காயம் -5 (அ)பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகு - 1 டீஸ்பூன்

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+தூள் வகைகள்+அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

*பின் புளிகரைசலை ஊற்றி நன்கு கொதிக்கவைத்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.