Monday, October 10, 2011

சௌ சௌ பாயாசம் / Chayote(Chow Chow ) Payasam

தே.பொருட்கள்

சௌசௌ - 1
பால் - 1 கப்
கன்ஸ்டண்ட் மில்க் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
பச்சை கலர் - 1 சிட்டிகை விரும்பினால்

செய்முறை

*சௌசௌ தோல் சீவி துண்டுகளாகி நைசாக அரைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் நெய்யில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் பாலை சேர்த்து வேகவிடவும்.

*கொஞ்சம்  கெட்டியான பதம் வந்ததும் கன்ஸ்டண்ட் மில்க்+கலர்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*மீதமுள்ள நெய்யில் முந்திரி,திராட்சை வதக்கி பாயாசத்தில் சேர்க்கவும்.

*இந்த பாயாசம் வித்தியாசமான சுவையில் இருக்கும். 

0 comments:

Post a Comment