Wednesday, October 5, 2011

காஞ்சிபுரம் இட்லி & தேங்காய் சட்னி /Kancheepuram Idly &Coconut Chutney

காஞ்சிபுரம் இட்லி செய்ய தே.பொருட்கள்

பச்சரிசி - 1 1/2 கப்
புழுங்கலரிசி - 1 1/2 கப்
உளுந்து - 1 கப்
உப்பு - தேவைக்கு
சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்

தாளிக்க

நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கரகரப்பாக பொடித்த மிளகு சீரகம் - தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
முந்திரி - விரும்பினால்

 செய்முறை
*இட்லி செய்ய கொடுத்துள்ள பொருட்களை உப்பு+சுக்குப்பொடி தவிர அரிசி+உளுந்து தனித்தனியாக ஊறவைத்து அரைத்து உப்பு+சுக்குப்பொடி சேர்த்து புளிக்கவைக்கவும்.

*மாவு புளித்ததும் நெய்யில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப்போட்டு தாளித்து சேர்க்கவும்.நல்லெண்ணெயும் ஊற்றி மாவை நன்கு கலக்கவும்.
*இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

சட்னி செய்ய தே.பொருட்கள்

தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
புளி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 1
பூண்டுப்பல் - 1
உப்பு - தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை,பெருங்காயம் - சிறிது

செய்முறை
*அனைத்தையும் ஒன்றாக அரைத்து தாளித்து சேர்க்கவும்.

0 comments:

Post a Comment