Sunday, October 23, 2011

மிக்ஸர் /Mixture

தே.பொருட்கள்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மைதா பிஸ்கட் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் பொரிக்க
அவல் - 1 கைப்பிடி
பொட்டுக்கடலை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கொத்து
முந்திரி - தேவைக்கு
வேர்க்கடலை - 1 கைப்பிடி

மைதா பிஸ்கட் செய்யும் முறை

மைதா+சர்க்கரை -தலா 1/4 கப்
வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை

*அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையானளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசையவும்.

*பின் உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் செய்து கட் செய்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*அல்லது 180°C முற்சூடு செய்த அவனில் பேக் செய்து எடுக்கலாம்.

செய்முறை

*எண்ணெயில் பொரிக்க கொடுத்துள்ளவைகளை தனித்தனியாக பொரித்துக் கொள்ளவும்.

*ஜிப்லாக் கவர் அல்லது ஒரு டப்பாவில் அனைத்து பொருட்களுடன் சிறிது உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பி.கு
பூந்தி செய்யும் போது மாவை 2  பங்காக பிரிது ஆரஞ்சு மற்றும் பச்சை கலர் சேர்த்து செய்தால் மிக்ஸர் பார்க்க அழகா இருக்கும்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

0 comments:

Post a Comment