Wednesday, December 28, 2011

 ருமாலி ரொட்டிஎன்றால் கைக்குட்டை மாதிரி மெலிதான ரொட்டி என்று அர்த்தம்.

தே.பொருட்கள்

மைதாமாவு - 2 கப்
கோதுமைமாவு - 1 கப்
பால் - தேவையனளவு
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

செய்முறை

*கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய்+பாலை தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*கொஞ்சகொஞ்சமாக வெதுவெதுப்பான பாலை ஊற்றி கெட்டியாக பிசைந்து,கடைசியாக  எண்ணெய் ஊற்றி பிசைந்து ஈரத்துணியால் மூடி 1மணிநேரம் வைக்கவும்.
 *பின் தேவையானளவில் உருண்டை எடுத்து நன்கு மெலிதாக தேய்க்கவும்.

*நான் ஸ்டிக்தவாவை குப்புற கவிழ்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

*தேய்த்த ரொட்டியை போட்டு வேகவைக்கவும். 
*ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
                                    
*சூடாக விருப்பமான க்ரேவியுடன் பரிமாறவும்.

 அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Monday, December 26, 2011


இந்த கொள்ளு பொடி கொங்குநாட்டு ஸ்பெஷல்.நன்றி தெய்வசுகந்தி!!

தே.பொருட்கள்:

கொள்ளு - 1 கப்
சின்ன வெங்காயம் - 6 பொடியாக நறுக்கியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டுப்பல் - 1
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தனியா - 1/2 டீஸ்பூன்

செய்முறை :
*கொள்ளை சுத்தம் செய்து 4 கப் நீர் விட்டு குக்கரில் 5 விசில் வரை வேகவிடவும்.

*பின் நீரை வடிகட்டி (அந்த நீரை கொள்ளு ரசத்திற்கு பயன்படுத்தலாம் )கொள்ளை நன்கு உலரவிடவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தனியா+சீரகம் போட்டு தாளித்து சின்ன வெங்காயத்தில் பாதியையும்+மிளகாய்+கறிவேப்பிலை+பூண்டுப்பல் சேர்த்து வதக்கி எடுக்கவும்.

*வதக்கிய பொருளுடன் உலர வைத்த கொள்ளு+மீதியுள்ள சின்ன வெங்காயம்+உப்பு சேர்த்து சின்ன இடிப்பானில் இடித்து எடுக்கவும்.

*இடிப்பான் இல்லையெனில் இவற்றை மிக்ஸியில் நீர்விடாமல் அரைத்தெடுக்கவும்.

*சாததுடன் நெய் விட்டு இந்த பொடி சாப்பிட அருமை....

Wednesday, December 21, 2011


தே.பொருட்கள்
கொண்டைக்கடலை - 1 1/2 கப்
துருவிய பீட்ரூட் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*கொண்டைக்கடலையை 6 மணிநேரம் மட்டும் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*அதனுடன் உப்பு+சோம்பு+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.கடைசியாக அதனுடன் பீட்ரூட் துருவலை சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.
*பின்   அதனுடன் வெங்காயம்+கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.                                                                    

Tuesday, December 20, 2011

வித்யா அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது,நன்றி!!

தே.பொருட்கள்

வேகவைத்த முட்டை - 4
Instant Dry Mashed Potato Mix - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - தேவைக்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*ஒரு பவுலில் உருளை மிக்ஸ்+வெங்காயம்+உப்பு+மிளகாய்த்தூள்+கொத்தமல்லித்தழை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*முட்டையை 2ஆகவோ அல்லது 4ஆகவோ கட்செய்யவும்.

*உருளை கலவையை சிறிது எடுத்து அதனுள் கட்செய்த முட்டையை வைத்து ஸ்டப் செய்யவும்.
*மைதா+உப்பு சேர்த்து சிறிது நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.

*ஸ்டப்பிங்கை மைதாவில் நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டவும்.
*கட்லட் அனைத்தையும் ப்ரிட்ஜில் 15 நிமிடம் வைத்திருந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பி.கு

*இன்ஸ்டண்ட் உருளை மிக்ஸ் பதிலாக வேகவைத்து மசித்த உருளையை சேர்க்கலாம்.

*எண்ணெயில் பொரிப்பதற்க்கு பதில் தவாவில் எண்ணெய்விட்டு 2புறமும் சுட்டெடுக்கலாம் அல்லது அவனில் பேக் செய்தும் எடுக்கலாம்.

*முட்டையை 2ஆக கட் செய்வதற்கு பதில் 4ஆக கட் செய்யலாம்.2ஆக கட் செய்தால் கட்லட் ரொம்ப பெரிதாக இருக்கும்.

*முட்டைக்கு பதில் துருவிய பனீர் அல்லது சீஸ் சேர்க்கலாம்.

Sunday, December 18, 2011

எப்பொழுதும் ஒரேமாதிரி புலாவ் செய்வதற்கு பதில் பருப்பு வகைகள் சேர்த்து செய்யலாம்.நன்றி ஷோபனா!!

தே.பொருட்கள்
பட்டர் பீன்ஸ் - 1 கப்
பாஸ்மதி - 2 கப்
வெங்காயம் - 1 நீளவாக்கில் நறுக்கியது
தக்காளி -1 பொடியாக நறுக்கியது
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
மஞ்சள்தூள்,கரம்மசாலா - தலா 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 4
சோம்பு - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 5

செய்முறை

*பட்டர் பீன்ஸை முதல்நாள் இரவே ஊறவைத்து,உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் வரை வேகவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய் தவிர அனைத்தையும் நைசாக அரைத்து,கடைசியாக தேங்காய்த்துறுவல் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்+உப்பு+அரைத்த மசாலா+கரம் மசாலா+மஞ்சள்தூள் +தக்காளிஎன ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் புதினா கொத்தமல்லி+வேகவைத்த பட்டர் பீன்ஸ்+அரிசி சேர்த்து வதக்கவும்.

*பட்டர் பீன்ஸ் வேகவைத்த நீரையும்  சேர்த்து 3 கப் நீர் சேர்த்து 10 நிமிடம்வரை வேகவைக்கவும்.

*ராய்தா அல்லது வறுவலுடன் பரிமாறவும்.

Wednesday, December 14, 2011

தே.பொருட்கள்
வேகவைத்து தோலுரித்த குட்டி உருளை - 1/4 கிலோ
வெந்தயக்கீரை - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம்,தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*உருளையை முள் கரண்டியால் அங்கங்கே குத்திவிடவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் வெந்தயக்கீரை+உருளை சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்கவும்.

Tuesday, December 13, 2011

ஆசியா அக்காவின் குறிப்பை பார்த்து ஒரு சில மாற்றங்களுடன் செய்தது.
தே.பொருட்கள்
சின்ன கத்திரிக்காய் - 6
வெங்காயம்,தக்காளி - தலா 1/2
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் குறைவாக
புளிவிழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
வெல்லம் - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

வறுத்து அரைக்க

காய்ந்த மிளகாய் - 3
தனியா - 1/2 டீஸ்பூன்
மிளகு,வெந்தயம்,கடுகு - தலா 1/4 டீஸ்பூன் கொஞ்சம் குறைவாக
சோம்பு,சீரகம்,எள் - தலா 1/4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டீஸ்பூன்

செய்முறை

*வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக அரைக்கவும்.

*பின் வெங்காயம்,தக்காளியையும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*கத்திரிக்காயை 4ஆக கீறி வறுத்தரைத்த பொருளை ஸ்டப் செய்யவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும். 

*பின் கரம் மசாலா+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி ஸ்டப் செய்த கத்திரிக்காயை சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*கத்திரிக்காய் ஒரளவுக்கு நிறம் மாறி வரும் போது அரைத்த வெங்கய தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.


*புளி விழுதை சிறிது நீரில் கரைக்கவும்.இதனுடன் வறுத்தரைத்த மசாலா மீதமிருந்தால் கரைக்கவும்.

*கத்திரிக்காய் நன்கு வெந்து வரும் போது புளிகரைசல்+உப்பு சேர்க்கவும்.

**நன்கு வெந்து கிரேவியாக வரும்போது வெல்லம்+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

பி.கு

*குக்கரில் செய்தால் நிறைய எண்ணெய் சேர்த்து செய்யவேண்டும்,அப்போழுதுதான் அடிபிடிக்காமல் வேகும்.

*குறைவான எண்ணெயிலேயே கடாயில் சிறுதீயில் அடிக்கடி கிளறிவிட்டு செய்யலாம்.

*புலாவ்,பிரியாணி,கலவை சாதத்துக்கு சூப்பர் காம்பினேஷன்.

*இதனுடன் கத்திரிக்காய் வெந்த பிறகு சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து செய்தால் க்ரெவியாக பரிமாறலாம்.

Monday, December 12, 2011

 கீதாவின் குறிப்பை பார்த்து செய்தது.நன்றி கீதா!!

சிக்கனை 2-3 மணிநேரம் ஊறவைக்க நேரம் இல்லையெனில் மிதமான சுடுநீரில் ஊறவைக்கவும்.அதற்குமேல் வேண்டாம்.அதிகநேரம் சுடுநீரில் சிக்கன் ஊறினால் நல்லதில்லை.

தே.பொருட்கள்

சிக்கன் லெக் பீஸ் - 4
எண்ணெய் - பொரிப்பதற்க்கு

சிக்கனில் ஊறவைக்க

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - 3 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது விரும்பினால்

முட்டை கலவை

முட்டையின் வெள்ளைக் கரு - 2
மிளகாய்த்தூள்/மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்

மைதா கலவை

மைதா - 1 கப்
ப்ரெட் க்ரம்ஸ் - 1/2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து அங்கங்கே கீறி விடவும்.

*ஒரு பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு அது முழ்குமளவு நீர் விட்டு சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு 2-3 மணிநேரம் ஊறவைக்கவும்.
 *முட்டைக் கலவையில் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து வைக்கவும்.

*மைதா கலவையில் கொடுத்துள்ள பொருட்களையும் கலந்து வைக்கவும்.

*சிக்கன் 2-3 மணிநேரம் ஊறிய பிறகு எடுத்து முட்டை கலவையில் நனைத்து பின் மைதா கலவையில் நன்கு பிரட்டவும்.

*பின் கடாயில் எண்ணெய் காயவைத்து மிதமான தீயில் 8-10 நிமிடங்கள் வரை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

Friday, December 9, 2011

இந்த செய்முறையில் ஊறுகாயை உடனே செய்து சாப்பிடலாம்.அடிக்கடி இப்படி எலுமிச்சை பழத்தை வேகவைத்து செய்து சாப்பிடுவது நல்லதல்ல.அவற்றின் சத்துக்கள் வேகவைக்கும் போது முற்றிலும் அழிந்துவிடும்.திடீர் அவசரத்திற்க்கு இந்த முறையில் செய்துக் கொள்ளலாம்.பச்சை எலுமிச்சையை விட மஞ்சள் கலர் கசக்காமல் இருக்கும்.

தே.பொருட்கள்
எலுமிச்சை பழம் - 4
கடுகுத்தூள்,வெந்தயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை
*தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பழத்தை போட்டு மூழ்குமளவு கொதிக்கும் நீரை ஊற்றி 20 நிமிடம் வைக்கவும்.

*பின் பழத்தை கட் செய்து மிளகாய்த்தூள்+உப்பு+தாளித்த பொருட்கள்+எண்ணெய்(காய வைத்து ஆறவைக்கவும்) அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

Thursday, December 1, 2011

தே.பொருட்கள்
வாழைக்காய் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க
மிளகு - 1/2 டீஸ்பூன் 
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 2

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.வாழைக்காயை வட்டமாக வெட்டி மஞ்சள்தூள் சேர்த்து தேவையானளவு நீர் விட்டு பாதியளவு வேகவைத்து நீரை  வடிக்கட்டவும்.

*பின் அதனுடன் உப்பு+அரைத்த மசாலா+மிளகாய்த்தூள்+கடலைமாவு சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பின் கடாயில் எண்ணெய்விட்டு இருபக்கமும் வறுத்தெடுக்கவும்.