இந்த செய்முறையில் ஊறுகாயை உடனே செய்து சாப்பிடலாம்.அடிக்கடி இப்படி எலுமிச்சை பழத்தை வேகவைத்து செய்து சாப்பிடுவது நல்லதல்ல.அவற்றின் சத்துக்கள் வேகவைக்கும் போது முற்றிலும் அழிந்துவிடும்.திடீர் அவசரத்திற்க்கு இந்த முறையில் செய்துக் கொள்ளலாம்.பச்சை எலுமிச்சையை விட மஞ்சள் கலர் கசக்காமல் இருக்கும்.
தே.பொருட்கள்
எலுமிச்சை பழம் - 4
கடுகுத்தூள்,வெந்தயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
செய்முறை
*தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பழத்தை போட்டு மூழ்குமளவு கொதிக்கும் நீரை ஊற்றி 20 நிமிடம் வைக்கவும்.
*பின் பழத்தை கட் செய்து மிளகாய்த்தூள்+உப்பு+தாளித்த பொருட்கள்+எண்ணெய்(காய வைத்து ஆறவைக்கவும்) அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

0 comments:
Post a Comment