Monday, December 12, 2011

KFC ஸ்டைல் ப்ரைடு சிக்கன் / KFC Style Fried Chicken

 கீதாவின் குறிப்பை பார்த்து செய்தது.நன்றி கீதா!!

சிக்கனை 2-3 மணிநேரம் ஊறவைக்க நேரம் இல்லையெனில் மிதமான சுடுநீரில் ஊறவைக்கவும்.அதற்குமேல் வேண்டாம்.அதிகநேரம் சுடுநீரில் சிக்கன் ஊறினால் நல்லதில்லை.

தே.பொருட்கள்

சிக்கன் லெக் பீஸ் - 4
எண்ணெய் - பொரிப்பதற்க்கு

சிக்கனில் ஊறவைக்க

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - 3 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது விரும்பினால்

முட்டை கலவை

முட்டையின் வெள்ளைக் கரு - 2
மிளகாய்த்தூள்/மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்

மைதா கலவை

மைதா - 1 கப்
ப்ரெட் க்ரம்ஸ் - 1/2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து அங்கங்கே கீறி விடவும்.

*ஒரு பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு அது முழ்குமளவு நீர் விட்டு சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு 2-3 மணிநேரம் ஊறவைக்கவும்.
 *முட்டைக் கலவையில் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து வைக்கவும்.

*மைதா கலவையில் கொடுத்துள்ள பொருட்களையும் கலந்து வைக்கவும்.

*சிக்கன் 2-3 மணிநேரம் ஊறிய பிறகு எடுத்து முட்டை கலவையில் நனைத்து பின் மைதா கலவையில் நன்கு பிரட்டவும்.

*பின் கடாயில் எண்ணெய் காயவைத்து மிதமான தீயில் 8-10 நிமிடங்கள் வரை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

0 comments:

Post a Comment