ருமாலி ரொட்டிஎன்றால் கைக்குட்டை மாதிரி மெலிதான ரொட்டி என்று அர்த்தம்.
தே.பொருட்கள்
மைதாமாவு - 2 கப்
கோதுமைமாவு - 1 கப்
பால் - தேவையனளவு
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
செய்முறை
*கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய்+பாலை தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*கொஞ்சகொஞ்சமாக வெதுவெதுப்பான பாலை ஊற்றி கெட்டியாக பிசைந்து,கடைசியாக எண்ணெய் ஊற்றி பிசைந்து ஈரத்துணியால் மூடி 1மணிநேரம் வைக்கவும்.
*பின் தேவையானளவில் உருண்டை எடுத்து நன்கு மெலிதாக தேய்க்கவும்.
*நான் ஸ்டிக்தவாவை குப்புற கவிழ்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
*தேய்த்த ரொட்டியை போட்டு வேகவைக்கவும்.
*ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
*சூடாக விருப்பமான க்ரேவியுடன் பரிமாறவும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

0 comments:
Post a Comment