காராசாரமான நெல்லிக்காய் ரசம் உடலுக்கு மிகவும் நல்லது.நன்றி ஏஞ்சலின்!!
தே.பொருட்கள்
நெல்லிக்காய் - 5
தக்காளி - 1
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
ரசப்பொடி - 2 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1 டீஸ்பூன்
நசிக்கிய பூண்டுப்பல் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - சிறிது
செய்முறை
*நெல்லிக்காயை துருவிக்கொள்ளவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து தக்காளி+உப்பு+பூண்டுப்பல்+சுக்குத்தூள்+மஞ்சள்த்தூள்+தூவிய நெல்லிக்காய் சேர்த்து வதக்கி 2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் ரசப்பொடி+வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

0 comments:
Post a Comment