Tuesday, February 8, 2011

சுறா மீன் கட்லட் / Shark Fish Cutlet

தே.பொருட்கள்:சுறா மீன் - 1/2 கிலோ
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியாது
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 4
பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை - சிறிதளவு
முட்டை - 2
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

*வெந்ததும் தோலை எடுத்து விட்டு மீனை உதிர்த்துக் கொள்ளவும்.

*அதனுடன் உருளைக்கிழங்கு +உப்பு+சோம்புத்தூள்+வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை நைத்தையும் ஒன்றாக கலந்து சிரு உருண்டையாக எடுத்து விரும்பிய வடித்தில் ஷேப் செய்யவும்.

*முட்டை ஒரு பவுலில் நன்கு அடிக்கவும்.ப்ரெட் க்ரம்ஸை ஒரு தட்டில் வைக்கவும்.

*உருண்டையை முட்டையில் நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் ப்ரட்டி 10 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்.

*பின் தவாவில் இருபக்கமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.

0 comments:

Post a Comment