Monday, April 28, 2014

தே.பொருட்கள்

சின்ன வெங்காயம் - 8
பூண்டுப்பல் - 10
புளிவிழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மணத்தக்காளி வத்தல் + நல்லெண்ணெய் - தலா 1/4 கப்

தாளிக்க

வடகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயப்பொடி - 1/4 டீஸ்பூன்

செய்முறை

*புளிவிழுதில் 2 கப் நீர் விட்டு மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து கரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மணத்தக்காளிவத்தல்+பூண்டு+வெங்காயம் சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

Wednesday, April 16, 2014

 ப்லான்/ காரமல் கஸ்டர் மிகவும் பிரபலமான டெசர்ட்..

தே.பொருட்கள்

பால் - 2 கப்
முட்டை -3
சர்க்கரை - 1/2 கப்
வெனிலா எசன்ஸ் -1 டேபிள்ஸ்பூன்

காரமல் செய்ய

ப்ரவுன் சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
நீர் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.அதனுடன் சர்க்கரை+எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
 *பாலை காய்ச்சி ஆறவைக்கவும்.மிதமான சூட்டில் முட்டையில் வடிகட்டி கலக்கவும். (சூட்டோடு பாலை கலந்தால் முட்டை திரிந்துவிடும்.)
 *கடாயில் ப்ரவுன் சுகரை போட்டு கரைந்ததும் நீர் சேர்த்து கலக்கி மோல்டில் ஊற்றி பரவலாக சுற்றி விடவும்.
 *அதன் மேல் முட்டை கலவையை ஊற்றவும்.
 *160°C முற்சூடு செய்த அவனில் 45-50 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.கத்தியில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும்.
*பேக் செய்து எடுத்ததும் ஆறியதும் ப்ரிட்ஜில் 3-4 மனிநேரம் குளிரவைத்து பரிமாறவும்.

பி.கு

*இதனை கேரமல் இல்லாமமும் செய்யலாம்.அதற்கு பதில் மோல்டில் வெண்ணெய் தடவி முட்டை கலவையை ஊற்றி பேக் செய்யவும்.

*ஒரே மோல்டில் ஊற்றாமல்  Ramkin கப்களில் கேரமலை சிறிது ஊற்றி அதன் மேல் முட்டை கலவையை 3/4 பாகம் வரை ஊற்றியும் பேக் செய்யலாம்.அப்படி செய்யம் போது பேக்கிங் டிரேயில் சிறிது தண்ணீர் ஊற்றி அதன்மேல் Ramkin கப்களை வைத்து பேக் செய்ய வேண்டும்.