Monday, June 27, 2011

ஆரஞ்சு பழ ரசம்/ Orange Rasam

தே.பொருட்கள்

தக்காளி - 2 பெரியது
வேகவைத்த பருப்புதண்ணீர் - 2 கப்
மஞ்சள்தூள்,துருவிய ஆரஞ்சுத்தோல் - தலா1/4 டீஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் - 1/4 கப்
ரசப்பொடி - 1 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டு - 2 பல்
கொத்தமல்லிதழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து பூண்டுப்பல்+தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.

*பின் உப்பு+வேகவைத்த பருப்புத்தண்ணீர்+ரசப்பொடி+மஞ்சள்தூள் சேர்க்கவும்.

*நுரை வரும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*ரசம் லேசாக ஆறியதும் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தோல் சேர்க்கவும்.

பி.கு
சூப் போலவும் இந்த ரசத்தை குடிக்கலாம்.இந்த ரசம் இனிப்புள்ள பழத்தில் செய்ததால் இனிப்பு சுவையுடன் இருந்தது.புளிப்பான பழத்தில் செய்தால் இன்னும் நல்லாயிருக்கும்.

Sending this Recipe To Savitha's  Orange Fruit Event.

0 comments:

Post a Comment