Monday, August 15, 2011

கடப்பா /Kadappa

தே.பொருட்கள்

வேகவைத்த பாசிப்பருப்பு - 1/2கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
நறுக்கிய வெங்காயம்,தக்காளி - தலா 1
கீறிய பச்சை மிளகாய் -3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிக்க
கிராம்பு - 3
பிரியாணி இலை- 2
கறிவெப்பிலை -1 கொத்து

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 *பின் இஞ்சி பூண்டு விழுது+தக்காளி சேர்க்கவும்.
 *நன்கு வதங்கியதும் மசித்த உருளை+பாசிப்பருப்பு+தேவையானளவு நீர்+உப்பு சேர்த்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.
 *பின் தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கவும்.
*இட்லி,தோசைக்கு பெஸ்ட் காம்பினேஷன்.....

0 comments:

Post a Comment