Friday, September 3, 2010

தஹி பூரி

தே.பொருட்கள்:
பூரிக்கு
ரவை - 1 கப்
மைதா - 1/2 கப்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
* ரவி +மைதா+உப்பு+ 1 டேபிள்ஸ்பூன் சூடு எண்ணெய்+தேவையான் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 15 நிமிடங்கள் வைக்கவும்.
*பிசைந்த மாவை பெரிய உருண்டையாக எடுத்து உருட்டி வட்டமான மூடியால் அல்லது குக்கீ கட்டரால் வட்டங்களால் வெட்டிக் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

புதினா சட்னி :
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
வெல்லம் - 1 சிறுகட்டி
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
* இவை அனைத்தும் மிக்ஸியில் அரைக்கவும்.

இனிப்பு சட்னி:
பேரிச்சை பழம் - 5
உலர் திராட்சை - 5
புளி - 1 கொட்டைபாக்களவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்குவெல்லம் - 1 சிறு கட்டி
* இவை அனைத்தும் 1/2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைத்து,அரைத்து வடிக்கட்டவும்.

தஹி பூரிக்கு செய்ய தே.பொருட்கள்
பூரி - 10
தயிர் - 1 கப்
ஸ்வீட் சட்னி - தேவைக்கு
க்ரீன் சட்னி - தேவைக்கு
வேக வைத்த மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வேக வைத்த கொண்டைக்கடலை - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி - 1
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
பூந்தி - தேவைக்கு

செய்முறை :
* தயிரில் சாட் மசாலா+உப்பு+சீரகத்தூள்+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.
*ஒரு பூரியின் ஒரு பக்கத்தை உடைத்து உருளைக்கிழங்கு+சென்னா+வெங்காயம்+தக்காளி + ஸ்வீட் சட்னி+ க்ரீன் சட்னி+தயிர் +பூந்தி வைத்து பரிமாறவும்.
*பூரி+க்ரீன் சட்னி+ஸ்வீட் சட்னி எல்லாவற்றையும் மொத்தமாக தயாரித்து வைத்துக்கொள்ளலாம்.பூரிகளை காற்று புகாத டப்பாவில் வைக்கலாம்.சட்னிகளை ப்ரிட்ஜில் 1 மாதம் வரை உபயோகிக்கலாம்.

0 comments:

Post a Comment