Wednesday, September 1, 2010

பூசணிக்காய் மோர் குழம்பு

தே.பொருட்கள்:
வெள்ளை பூசணிக்காய் துண்டுகள்- 1 கப்
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
தனியா- 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி -1 சிறுதுண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*துவரம்பருப்பு+பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.தயிரில் உப்பு+எலுமிச்சை சாறு சேர்த்து கடைந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய்விட்டு தனியா+காய்ந்த மிளகாய்+பச்சை மிளகாய்+இஞ்சி+ஊறவைத்த அரிசி பருப்பு இவைகளை வறுத்து இதனுடன் தேங்காய்+சீரகம் சேர்த்து மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் பூசணிக்காய்+துண்டுகளாகிய தக்காளி போட்டு முழ்குமளவு நீர்விட்டு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் அரைத்தவிழுது சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.நன்கு கொதித்ததும் கடைந்த தயிரை ஊற்றி நுரைவரும் போது இறக்கி கடுகு+கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

0 comments:

Post a Comment