
தே.பொருட்கள்:
ஒட்ஸ் -1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு -1/4 டீஸ்பூன்
உளுத்த பருப்பு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
கடலைப்பருப்பு- 1/2 டீஸ்பூன்
செய்முறை:
*ஒட்ஸை வெறும் கடாயில் வறுத்து ஆறவிடவும்.
*பின் உப்பு கலந்து நீர் தெளித்து புட்டு மாவு பிசைவது போல உதிராக பிசையவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*வதங்கிய பின் உதிராக பிசைந்த ஒட்ஸை போட்டு கிளறி இறக்கவும்.
0 comments:
Post a Comment