Monday, September 13, 2010

உளுந்து பூரண‌ கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்..நேரமில்லாததால் இந்த பதிவு லேட்டாகிவிட்டது...
மேல் மாவுக்கு:
அரிசி மாவு ‍_ 2 கப்
நல்லெண்ணெய் _ 1 டேபிள்ஸ்பூன்
உப்பு _ தேவைக்கு

பூரணம் செய்வதற்க்கு:
வெள்ளை முழு உளுந்து ‍_ 3/4 கப்
தேங்காய்த்துறுவல் _ 1/4 கப்
பெருங்காயம் - சிறிதளவு
பச்சை மிளகாய் _ 2

தாளிக்க‌:
கடுகு _ 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு _ 1/2 டீஸ்பூன்

செய்முறை:
*முழு உளுந்தை 1/2 ம‌ணிநேர‌ம் ஊற‌வைத்து நீரை வ‌டிக‌ட்டி அத‌னுட‌ன் உப்பு+தேங்காய்த்துறுவ‌ல்+ப‌ச்சை மிள‌காய்+பெருங்காயம் சேர்த்து நீர் விடாம‌ல் கொர‌கொர‌ப்பாக‌ அரைக்க‌வும்.

*அத‌னை ஆவியில் வேக‌வைத்து உதிர்த்துக் கொள்ள‌வும்.

*பின் கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து உதிர்த்த‌ உளுந்து பூர‌ண‌த்தை சேர்த்து கிள‌ற‌வும்.

*இப்பொழுது பூர‌ண‌ம் ரெடி!!
*ஒரு பாத்திர‌த்தில் 3 க‌ப் நீர் விட்டு ந‌ல்லெண்ணெய்+உப்பு சேர்த்து ந‌ன்கு கொதிக்க‌ விட‌வும்.

*நீர் ந‌ன்கு கொதிக்கும் போது மாவை தூவி க‌ட்டியில்லாம‌ல் கெட்டியாக‌ கிள‌ற‌வும்.

*கைபொறுக்கும் சூட்டில் மாவை சிறு உருண்டையாக‌ எடுத்து த‌ட்டி அத‌னுள் பூர‌ண‌த்தை வைத்து மூட‌வும்.

*அத‌னை ஆவியில் வேக‌ வைத்து எடுக்க‌வும்.

0 comments:

Post a Comment