
நெய் காய்ச்சும் போது நாம் முருங்கை கீரையை உபயோகப்படுத்துவோம்.அதற்க்கு பதில் கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து செய்தால் வாசனை தூக்கலாக இருக்கும்..
தே.பொருட்கள்:உப்பில்லாத வெண்ணெய் - 250 கிராம்
கறிவேப்பிலை - 2 இனுக்கு
காய்ந்த மிளகாய்- 1
கல் உப்பு - 5
செய்முறை:*வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் போட்டு உருக்கவும்.

*உருகியதும் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது கல் உப்பு+காய்ந்த மிளகாய்+கறிவேப்பிலை சேர்க்கவும்.

*பின் நுரைபோல் வரும் அதை கரண்டியால் மேலோடு எடுத்து கீழே ஊற்றி விடவும்.

*பின் நன்றாக தெளிந்து வாசனை வரும் போது இறக்கி ஆறவைத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தவும்.

*இந்த முறையில் காய்ச்சும் பொது வீடே மணமாக இருக்கும்....
0 comments:
Post a Comment