தே.பொருட்கள்:
பப்ஸ் ஷீட் - 1
ஒட்ஸ் - 1/4 கப்
பட்டைத்தூள் - 1 டீஸ்பூன்
ப்ரவுன் சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த திராட்சை - 10
நெய் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
முட்டை - 1
செய்முறை:
*ஒட்ஸை நெய் விட்டு லேசாக வறுக்கவும்.ஆறியதும் இதனுடன் சர்க்கரை+திராட்சை+பட்டைத்தூள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*பப்ஸ் ஷீட்டில் வெண்ணையை உருக்கி தடவும்.அதன் மேல் ஒட்ஸ் கலவையை பரவலாக தூவி ஓரத்தில் கடைசிவரை மெதுவாக சுருட்டவும்.
*இதனை க்ளியர் ராப் கவரில் சுருட்டி ப்ரீசரில் 15 நிமிடம் வைத்தெடுத்து துண்டுகளாக வெட்டவும்.முட்டையை ஒரு கிண்ணத்தில் நன்கு கலந்து வைக்கவும்.
*அவன் டிரேயில் அடுக்கி முட்டை ப்ரஷ்ஷால் தடவி,210 °C முற்சூடு செய்த அவனில் பேக் செய்து எடுக்கவும்.

0 comments:
Post a Comment