தே.பொருட்கள்
கத்திரிக்காய் -1 பெரியது
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
தேங்காய் எண்ணெய் -1 டீஸ்பூன்
அரைக்க
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
செய்முறை
*ஒரு பாத்திரத்தில் கத்திரிக்காயை பொடியாக நறுக்கி உப்பு+மஞ்சள்தூள்+சாம்பார் பொடி+தேவையானளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.
*கத்திரிக்காய் வெந்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 5நிமிடம் கொதிக்கவிடவும்.
*பின் வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
பி.கு
கத்திரிக்காய் பதில் முருங்கைக்காய்,பீர்க்கங்காய் சேர்த்து செய்யலாம்.

0 comments:
Post a Comment