இன்றோடு என் வலைப்பூவில் எழுத தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைகின்றது....
தே.பொருட்கள்
கேக் மாவு - 1& 1/2 கப்
கெட்டி தயிர் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப் (பொடிக்கவும்)
பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - 2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் - 1/2 கப்
செய்முறை
*அவனை 180°C 10 நிமிடங்கள் முற்சூடு செய்யவும்.
*கேக் மாவில் பேக்கிங் பவுடரை கலந்து 2 முறை சலிக்கவும்.
*ஒரு பவுலில் சர்க்கரை+தயிர்+எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
*பின் கொஞ்ச கொஞ்சமாக கேக் மாவை கட்டியில்லாமல் கலக்கவும்.கடைசியாக எசன்ஸ் சேர்த்து மிருதுவாக கலக்கிவிடவும்.
*கேக் பானில் எண்ணெய்/ வெண்ணெய் தடவி மைதா மாவை பரவலாக தூவி விட்டு,அதிகப்படியான மாவை கொட்டிவிடவும்.அதில் கேக் கலவையை ஊற்றவும்.
*முற்சூடு செய்த அவனில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
பி.கு
*இதில் வெண்ணெய்+முட்டை சேர்க்காமல் செய்துள்ளேன்.
*கேக் மாவு = 1 & 1/4 கப் மைதா + 1/4 கப் சோள மாவு(வெள்ளைக் கலர்)
*1 கப் = 250 ml
*2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்க்கு பதில் 1 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்+3/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கலாம்.

0 comments:
Post a Comment