Wednesday, May 16, 2012

முட்டையில்லாத கேரட் கேக்(ப்ரெஷர் குக்கர் செய்முறையில்) /Eggless Carrot Cake (Pressure Cooker Method)

 அவன் இல்லையென்றாலும் கேக் செய்யலாம்.முதல் முறையாக ப்ரெஷர் குக்கரில் செய்த கேக்...நான் ஸ்டிக் ப்ரெஷர் குக்கராக இருந்தால் நல்லது,அலுமினியத்தில் பயன்படுத்துவதாக இருந்தால் பேக்கிங் சோடாவை தூவி பயன்படுத்தினால் குக்கரின் உட்பாகம் கருக்காது.

கேக் செய்யும் குக்கரில் தண்ணீர் ஊற்றக்கூடாது.விசில் மற்றும் கேஸ்கட் போடகூடாது.கேக் பாத்திரத்தை நேரடியாகவும் வைக்ககூடாது.குக்கர் ஸ்டாண்ட் வைத்து அதன்மேல் கேக் பாத்திரத்தை வைக்கவும்.

குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கேக் செய்யும் போது சொதப்பிவிட்டது.பின் இந்த ரெசிபியை பார்த்து செய்ததில் சரியாக வந்ததிலிருந்து பெரும்பாலும் ஸ்டீம்ட் கேக்தான் செய்கிறேன்...
தே.பொருட்கள்

மைதா - 1 கப்
சர்க்கரை -3/4 கப்
கேரட் பெரியது - 1 துருவிக்கொள்ளவும்
பால் -1/2 கப்
வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்
வெஜிடேபிள் எண்ணெய் - 1/2 கப்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர் - தலா 1/2 டீஸ்பூன்

செய்முறை

* பாலில் வினிகரை கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*மைதா+ பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா சேர்த்து 2முறை சலிக்கவும்.

*10நிமிடத்திற்கு பிறகு பால் திரிந்து இருக்கும்,அதனை நன்கு கலக்கவும்.

*பின் சர்க்கரை+எண்ணெய் சேர்த்து ,சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.
 *குக்கரை 5 நிமிடம் அடுப்பில் வைத்து சூடு செய்து ,பேக்கிங் சோடாவை தூவி விடவும்.

*பின் மைதா கலவை+எசன்ஸ்+துருவிய கேரட் அனைத்தையும் மிருதுவாக சர்க்கரை கலவையில் கலக்கவும்.

*கேக் பாத்திரத்தில் எண்ணெய் தடவி,மைதா மாவை தூவி விடவும்.பின் கேக் கலவையை ஊற்றவும்.

*குக்கரின் ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் கேக் பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் வேகவிடவும்.

*பின் குறைந்த தீயில் 25-30 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.நடுவில் குத்தி பார்க்கும் போது வேகவில்லை எனில் மேலும் 5-10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவைத்து எடுக்கவும்.

0 comments:

Post a Comment