Sunday, October 14, 2012

தந்தூரி சிக்கன் - 2/Tandoori Chicken - 2

இந்த தந்தூரி சிக்கன் செய்முறையில் ஓமம்,கடலைமாவு,கடுகுத்தூள் இவற்றெல்லாம் சேர்ப்பதால் நல்ல வாசனை+சுவையுடன் இருக்கும்.நன்றி சரஸ்வதி!!

தே.பொருட்கள்

சிக்கன் லெக்பீஸ் - 5
எண்ணெய் - தேவைக்கு

மசாலா பொருட்கள் -1

எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்
வர மிளகாய்த்தூள் -  1/2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

மசாலா பொருட்கள் - 2

வறுத்து பொடித்த ஓமம் - 1டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்

மசாலா பொருட்கள் - 3

கெட்டி தயிர் - 1 கப்
சிகப்பு கலர் - 2 சிட்டிகை
கடுகு எண்ணெய்/ எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1  டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
வறுத்து பொடித்த கடுகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து மசாலா பொருட்கள் -1ல் கொடுத்துள்ள பொருட்களுடன் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
 *கடாயில் எண்ணெய் விட்டு வறுத்து பொடித்த ஓமம் போட்டு தாளித்து கடலைமாவை போட்டு கட்டிவிழாமல் வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
 *மசாலா பொருட்கள் - 3ல் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து அதனுடன் வறுத்த கடலைமாவினை நன்றாக கலக்கவும்.அதனுடன் சிக்கனையும் ஊறவைத்த எலுமிச்சை சாறுடன் கலந்து 2-3 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*முற்சூடு செய்த அவனில் 200 ல் 40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

0 comments:

Post a Comment