Thursday, October 18, 2012

பனீர் கேபேஜ் ரோல்ஸ்/Paneer Cabbage Rolls

தே.பொருட்கள்

கோஸ் இலைகள் - 4

ஸ்டப்பிங் செய்ய

துருவிய பனீர் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்+தக்காளி - தலா 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+ இஞ்சிபூண்டு விழுது +தூள் வகைகள்+உப்பு என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் பனீர் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.


*கோஸ்  இலைகளை முழுதாக எடுத்து கொதிக்கும் நீரில் 3-4 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
*கோஸின் அடிப்பகுதியில் மொத்தமாக இருக்கும் தண்டினை மேலாக வெட்டி எடுத்தால் சுருட்டுவதற்க்கு எளிதாக இருக்கும்.

*இலையில் ஸ்டப்பிங்கை வைக்கவும்.
*மெதுவாக பாதிவரும் சுருட்டி ஒருபக்க முனைகளை உள்நோக்கி மடக்கி கடைசி வரை சுருட்டவும்.இலைகள் பிரியாது.ஒட்டிக்கொள்ளும்.

*அப்படி ஒட்டவில்லை என்றால் டூத்பிக்கினைக் கொண்டு குத்தி விடவும்.
*ரோலினை ஆவியில் 10-15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

பி.கு
*இதனை அவனில் வைத்தும் பேக் செய்து எடுக்கலாம்.200°C  ல் 10 -15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கலாம்.

*கோஸ் இலைகளை முழுதாக எடுக்க முழு கோஸின் அடிப்பகுதி வட்டமாக உள்ள தண்டினை மேலோடும்,சிறிது உள்நோக்கியும் வெட்டி எடுத்தால் இலைகளை பிரியாமல் முழுதாக எடுக்கலாம்.

*இந்த ரோலினை சில்லி கார்லிக் சாஸுடன் பரிமாற நன்றாக இருக்கும்.

0 comments:

Post a Comment