Monday, October 22, 2012

வல்லாரைக்கீரை சாலட்/Vallarai Keerai(Indian Penny Wort) Salad

அக்காவிடம் கற்றுக்கொண்ட குறிப்பு.இந்த சாலட் கசப்பு,புளிப்பு ,காரசுவையுடன் இருக்கும்.

இந்த கீரையில் நிறைய மருத்துவக்குணங்கள் இருக்கு.

*வெண்டைக்காய் போலவே இந்தக்கீரைக்கு ஞாபகசக்தியினை அதிகப்படுத்தும் தன்மை உண்டு.

*இந்த கீரை வயிற்றுப்புண்ணுக்கும்,தோல் அலர்ஜி உள்ளவர்களுக்கும்,நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும்,இரத்தசோகைக்கும்,சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மிக நல்லது.

*இதில் அதிகளவு விட்டமின் B1(Thiamin) ,விட்டமின் B2 (Riboflavin),விட்டமின் B3 (Niacin) ,விட்டமின் B6(Pyridoxine),விட்டமின் K, கால்சியம்,மாக்னீசியம்,சோடியம் என நிறைய இருக்கு.

*இந்த கீரையின் சாறை பயன்படுத்தினால் முடிஉதிர்வை தடுக்கும்.இந்தக்கீரையின் சாறை எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெயைக் கலந்து சூடுபடுத்தி ஆறவைத்து தினமும் பயன்படுத்தவும்.

*கீரை சாறு எடுக்க - இலைகளை நேரடியாக அடுப்பில் வாட்டி சாறினை எடுக்கவும்.

தே.பொருட்கள்
பொடியாக அரிந்த வல்லாரைக்கீரை - 1/2 கப்
பொடியாக நறுக்கிய சிகப்பு வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

பி.கு

சிகப்பு வெங்காயத்திற்கு பதில் நான் வெள்ளை வெங்காயம் சேர்த்து செய்துள்ளேன்.

0 comments:

Post a Comment