Tuesday, October 16, 2012

இத்தாலியன் ப்ரெட் சூப்/Italian Bread Soup

இந்த சூப் செய்வதற்கு நாம் வேண்டாம் என ஒதுக்கும் ப்ரெட்டின் ஓரங்களில் இருந்து செய்தது.நன்றி ஜெயஸ்ரீ!!

தே.பொருட்கள்

ப்ரெட்டின் ஓரங்கள்(ப்ரவுன் பகுதி/Bread Crust) - 4/5 ப்ரெட்களிலிருந்து
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 /பாஸ்தா சாஸ் -3 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
வெண்ணெய் -1/2  டீஸ்பூன்
தண்ணீர் -3 கப்
ஆரிகனோ - 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

செய்முறை
*கடாயில் வெண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டுப்பல்+வெங்காயம்+தக்காளி+ப்ரெட்டின் ஓரங்கள் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் 2 கப் அளவு நீர் சேர்த்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

*இவற்றை ஆறவைத்து நைசாக அரைத்து மீண்டும் பாத்திரத்தில் உப்பு+மிளகுத்தூள் +ஆரிகனோ +1 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*கெட்டியான பதத்தில் இறக்கவும்.

பி.கு

*ஒரிஜினல் ரெசிபியில் பாஸ்தா சாஸ் சேர்த்து செய்திருந்தாங்க,நான் அதற்கு பதில் தக்காளி சேர்த்து செய்தேன்

*பாஸ்தா சாஸ் சேர்ப்பதாக இருந்தால் ப்ரெட்டின் ஒரங்கள் வதங்கிய பிறகு சாஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.

*அவர்கள் செய்த அளவிற்கு சூப் நிறம் வரவில்லை,ஒருவேளை சாஸ் சேர்த்து செய்திருந்தால் வந்திருக்கும்னு நினைக்கிறேன்,ஆனாலும் சுவை மிக நன்றாக இருந்தது.

0 comments:

Post a Comment