Tuesday, May 3, 2011

அவியல் / Aviyal

தே.பொருட்கள்

முருங்கைக்காய் - 1
வெள்ளை பூசணிக்காய் துண்டுகள் -1/4 கப்
கேரட் - 1
பீன்ஸ் - 10
வாழைக்காய் - 1
சேனைக்கிழங்கு துண்டுகள் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 3/4 கப்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வெங்காயத்தை தவிர மீதியுள்ள பொருட்களை சேர்த்து நைசாக அரைக்கவும்.கடைசியாக வெங்காயத்தை சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.

*காய்களை சற்றே பெரியதுண்டுகளாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் காய்களைப் போட்டு உப்பு சேர்த்து காய்களின் அளவுக்கேற்ப நீர் விட்டு குழையாமல் வேகவைக்கவும்.

*அடிக்கடி கரண்டியால் கிளறிவிடக்கூடாது,காய் குழைந்துவிடும்.

*வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றி 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

*லேசாக ஆறியதும் தயிரை ஊற்றி கலக்கவும்.பின் தே.எண்ணெயில் கறிவேப்பிலையை தாளித்து கொட்டவும்.

0 comments:

Post a Comment