சீர்+அகம்=சீரகம்.வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
அஞ்சறைப் பெட்டியில் முக்கிய இடம் பெற்ற பொருள் இது.
*தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொண்டு,நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.
*சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
*சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.இதன் பயன்கள் ஏராளமானது.
எப்போழுதும் ஒரே மாதிரி புலாவ் செய்வதற்க்கு பதில் சீரக புலாவ் செய்யலாம்.செய்வதும் மிக எளிது.பாகிஸ்தான் ரெஸ்ட்டாரண்ட் போனால் இந்த சீரகபுலாவ் தான் இருக்கும்.சுவையானதும் கூட.
தே.பொருட்கள்
பாஸ்மதி - 2 கப்
நெய்- 1டேபிள்ஸ்பூன்பசும்பால் -2 கப்
தண்ணீர் - 1கப்
உப்பு -தேவைக்கு
தாளிக்க
கிராம்பு -3
சீரகம்- 1டீஸ்பூன்பிரியாணி இலை -2
செய்முறை
*அரிசியை 10 நிமிடம் ஊறவைத்து கழவி நீரை வடிக்கவும்.
பி.குபசும்பாலுக்கு பதில் தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.

0 comments:
Post a Comment