ஓமம்( Ajwain, Carom seeds) இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.
*ஓமத்தில் கால்சியம் , பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின்(Carotin), தையாமின்(Thiamin), ரிபோபுளேவின்(Rhiboflavin) மற்றும் நியாசின்(Niacin) போன்றவை அடங்கியுள்ளன.
*சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
*ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.
*ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
இதில் பிஸ்கட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...
தே.பொருட்கள்
மைதா மாவு - 2கப்
வெண்ணெய் - 50 கிராம் அறை வெப்பநிலையில்
ஓமம் -2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
பால் - மாவு பிசைய தேவையானளவு
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்(அ)பேக்கிங் சோடா- 1/2 டீஸ்பூன்
செய்முறை
*ஒரு பவுலில் பால் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*தேவையானளவு பால் தெளித்து சப்பாத்திமாவு பதத்தில் கெட்டியாக பிசையவும்.
*2 பங்காக மாவை பிரித்து மெலிதாக இல்லாமலும்,தடிமனாக இல்லாமலும் உருட்டவும்.*குக்கீ கட்டரால் விரும்பிய வடிவில் வெட்டவும். (என் பொண்ணுதான் குக்கீ கட்டரால் கட் செய்து கொடுத்தாங்க).
*பிஸ்கட் உப்பாமல் இருக்க அங்கங்கே முள் கரண்டியால் குத்தி விடவும்.
*அவன் டிரேயில் அடுக்கி 180°C டிகிரியில் 15 - 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
பி.கு
பிஸ்கட் சூடாக இருக்கும் போது மெத்தென்று இருக்கும்.ஆறியதும் க்ரிஸ்பியாக இருக்கும்.

0 comments:
Post a Comment